மார்ச் 19 ஆகிய நேற்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உடைய அமைப்பான ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பாக 10 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு அரசு எந்தவித பதிலும் அளிக்காத நிலையில் மீண்டும் அடுத்த அடுத்த போராட்டங்களுக்கான தேதிகளை குறித்து இருக்கிறது ஜாக்டோ ஜியோ அமைப்பு.
ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் முக்கிய கோரிக்கைகள் :-
✓ பழைய ஓய்வூதிய திட்டம்
✓ நிரந்தர வேலை வாய்ப்பு
✓ காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
✓ 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்
✓ சரண் விடுப்பு சலுகைகளை பணமாக மாற்றிக் கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும்
✓ பணி நிரந்தரத்தோடு காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் போன்றவை.
நேற்று நடந்த போராட்டத்தை அடுத்து அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கப்படாத நிலையில் மீண்டும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் அதன்படி, மாவட்ட அளவில் அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் மார்ச் 24ஆம் தேதி நடத்த இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் வருகிற ஏப்ரல் 3 ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மாநில அளவில் முழு நேர கோரிக்கை தர்ணா போராட்டம் போராட்டம் ஆனது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் ஏப்ரல் 25 ஆம் தேதி மேற்கொள்ளப்படும் என்று அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் வெளியிட்டு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்.