அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தின் புதிய திட்டம்!! கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை!!

Photo of author

By Parthipan K

அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தின் புதிய திட்டம்!! கட்டணத்தில்  50 சதவீதம் சலுகை!!

தமிழகத்தில் அரசு விரைவு பேருந்தில் கட்டணத்தில்  50 சதவீதம் சலுகை அளிக்க படுவதாக அறிவித்திருந்த நிலையில் பொதுமக்கள் அதிக அளவில் பயன்பெற்று வருகின்றனர்.

இன்று பெரும்பாலானோர் பேருந்துகளில் தான் அதிக அளவில் பயணிக்கின்றனர். பள்ளிக்கு செல்லுதல் ,வேலைவாய்ப்பு , மருத்துவமனைக்கு செலுத்தல் மற்றும் தொழில் காரணமாக சொந்த ஊரை விட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லுதல் இவ்வாறு பெரிதும் பேருந்துகளையே பயன்படுத்துகிறார்கள்.

அதிலும் தனியார் பேருந்துகளில் அதிக அளவில் கட்டணம் இருப்பதால் பொதுமக்கள் பெரும் அளவில் அரசு பேருந்தையே தேடி வருகின்றனர்.

பொதுமக்களின் நலன் கருதி அரசு விரைவு போக்குவரத்துகழகம் ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.அதன்படி கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்து வருகின்றது.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மொத்தம் 1078 பேருந்துகள் உள்ளது. பேருந்துகளில் பொதுமக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன்  காரணமாக இந்த திட்டம் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரால் நடைமுறை படுத்தப்பட்டது.

இதன்படி மாதம் 5 முறை முன் பதிவு செய்து பயணிப்பவருக்கு அடுத்த பயணகட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 50 சதவீதம் சலுகை திட்டத்தின் மூலம் மட்டும் பயணிகள் ரூ 1,8586  லட்சம் சேமித்துள்ளனர் இதில் ஜூன் 22ம் தேதி  மட்டும் 487 இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டது.

அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளித்ததன் காரணமாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று தெரிவித்தனர்.