புற்றுநோயால் இறந்த ஆயுதப்படை பெண் காவலருக்கு அரசு மரியாதை!

0
127

திருச்சி ஆயுதப்படை முதன்மை காவலராக பணிபுரிந்து வந்த மகேஸ்வரி என்பவர் புற்றுநோயால் நேற்று உயிர் இழந்த நிலையில் இன்று அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது.

திருச்சி மணப்பாறையை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேஸ்வரி நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மணப்பாறையில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

மகேஸ்வரியின் உடலுக்கு துணைக் கண்காணிப்பாளர் பிருந்தா தலைமையில் ஆயுதப்படை காவலர்கள் மரியாதை அணிவகுப்பு நடத்தி மூன்று முறை வானத்தை நோக்கி சுட்டு  அரசு மரியாதை வழங்கப்பட்டது.

அனைத்து இறுதிச் சடங்கு முடிந்த பின்னர் உடல் நகராட்சி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Previous articleநீங்கள் 2000 ரூபாய் நோட்டுக்களை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா !! உங்களுக்கான முக்கிய செய்தி !!
Next articleபண்டிகையை ஒட்டி 200 ரயில்கள் கூடுதலாக இயக்க ரயில்வே வாரியம் திட்டம்!