பண்டிகையை ஒட்டி 200 ரயில்கள் கூடுதலாக இயக்க ரயில்வே வாரியம் திட்டம்!

0
80

வருகின்ற மாதம் பண்டிகை அதிகமாக வருவதால் 200 ரயில்களை கூடுதலாக இயக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

ரயில்வே வாரியத்தின் தலைமை நிர்வாகி வி.கே யாதவ் இதுபற்றி கூறிய பொழுது ” மண்டல பொது மேலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் உள்ளூர் நிர்வாகத்துடன் பேசி கொரோனா நிலையை மறுபரிசீலனை செய்து அந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

எத்தனை ரயில்களை இயக்கலாம் என்று முடிவு அறிவிக்கப்படும். இப்பொழுது 200 ரயில்களை இயக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். இது கருத்துக்கணிப்பு மட்டுமே. மேலும் கூடுதலாக கூட ரயில்கள் இயக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தினசரி ரயில் போக்குவரத்து பற்றி பேசுகையில் மாநில அரசுகளுடன் கலந்து கொரோனா நிலைமையை பரிசோதனை செய்து தேவைப்படும் இடங்களில் தினசரி ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் ரயில்வே போக்குவரத்து அனைத்தும் அடங்கிய நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த பொழுது கொஞ்சம் கொஞ்சமாக ரயில்கள் இயக்கப்பட்டு இருந்த நிலையில் செப்டம்பர் 12 முதல் 80 ரயில்களை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரயில்வே போக்குவரத்து படிப்படியாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

author avatar
Kowsalya