இந்த தேதியில் அரசு மருத்துவமனைகள் செயல்படாது! மருத்துவர்கள் போராட்டம் கோரிக்கை இதுதான்!
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்,அதன் மாநிலத் தலைவர் செந்தில் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடை பெற்றது.அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்கத் தலைவர் செந்தில் கூறுகையில்.அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை உறுதி செய்யும் அரசாணையை அமல்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு கூடுதல் பணிநேரம் வழங்கியதை திரும்ப பெற வேண்டும்.காலை 9 மணி முதல் 4 மணி வரை மட்டுமே பணி நேரம் என்பதை அமல்படுத்த வேண்டும்.
பொதுவாக மருத்துவக் காப்பீட்டை மட்டும் முன்னிறுத்தி மாநில அளவில் ஆய்வு செய்து மருத்துவர்களுக்கு மதிப்பு குறியீடுகள் வழங்கபடுகிறது. அதுபோன்ற மதிப்பு குறியீடுகள் பெறாத மருத்துவர்களுக்கு பணியிட மாற்றம்,இடைநீக்கம் போன்றவை வழங்கப்படும் என அச்சுறுத்தப்படுகிறது.
மேலும் இவ்வாறான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளனர்.அதனையடுத்து மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதிக்குள் போராட்டம் நடைபெறும்.
இந்த போராட்டத்தில் எங்களுடைய கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் வரும் மார்ச் 15 ஆம் தேதி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சை பிரிவினை தவிர்த்து பிற சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் அனைவரும் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என தெரிவித்தனர்.