ஒரு டிரம் வெறும் 500க்கு.. பன்றிக்கு இரையாகிறது அரசு விடுதி மாணவர்களின் உணவு!

Photo of author

By Vijay

ஒரு டிரம் வெறும் 500க்கு.. பன்றிக்கு இரையாகிறது அரசு விடுதி மாணவர்களின் உணவு!

Vijay

தமிழகம் முழுவதும் 1,331 விடுதிகளில் 65,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருக்கின்றனர். பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1,400 ரூபாய், கல்லூரி மாணவர்களுக்கு 1,500 ரூபாய் உணவுக்காக வழங்கப்படுகிறது. சென்னையில் ஒருங்கிணைந்த சமையலறை மூலம் உணவு தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது, மேலும், அதிகாரிகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பதாக கூறுகின்றனர்.

ஆனால், உண்மையில் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதால், மாணவர்கள் அதை உணவருந்துவதில்லை. பலர் சுவை இல்லாத உணவை தவிர்த்துவிடுகின்றனர்.

விடுதி ஊழியர்கள், அந்த உணவை அருகிலுள்ள பண்ணைகளுக்கு விற்பனை செய்கின்றனர். சென்னை சைதாப்பேட்டை, மயிலாப்பூர் விடுதி மாணவர்கள், “ஒருங்கிணைந்த சமையலறை திட்டத்தை கைவிட வேண்டும். உணவுப் படியை 50 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தி தரமான உணவு வழங்க வேண்டும்” என கோருகின்றனர்.

மாணவர்கள் நேரத்திற்கு வரவில்லை என்றால், உணவை ‘வேஸ்டேஜ்’ எனக் கூறி விற்கப்படுகிறது. தினசரி 1-2 டிரம் உணவு பன்றி பண்ணைகளுக்கு செல்லும். திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், உணவு தரக்குறைவாக இருப்பதாகவும், குறிப்பிட்ட நேரத்திற்குள் வராவிட்டால் உணவு வழங்க மறுக்கப்படுவதாகவும் மாணவர்கள் புகார் அளிக்கின்றனர்.