10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு வேலை..!

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு வேலை..!

செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள “பதிவறை எழுத்தர்” (Record Clerk) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம் (செங்கல்பட்டு)

பணி:

*பதிவறை எழுத்தர் (Record Clerk)

பணியிடங்கள்: 01

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 32 என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது.

சம்பளம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,900/- முதல் ரூ.50,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் பணி குறித்து கூடுதல் விவரங்களை அறிய www.chengalpattu.nic.in என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08-02-2024 விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஆகும்.