டிகிரி முடித்தவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு வேலை!

Photo of author

By Divya

டிகிரி முடித்தவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு வேலை!

காஞ்சிபுரம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு அலுவலர்கள்பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஜனவரி 08 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நிறுவனம்: வழக்கு அலுவலர்கள் (Case worker)

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01

கல்வித் தகுதி: வழக்கு அலுவலர்கள் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் மேலாண்மை வளர்ச்சி, சமூகப் பணியில், உளவியல் ஆலோசகர் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதுமட்டும் இன்றி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு அல்லது அரசு சாரா நிறுவனத்தில் குறைந்தது 1 வருடம் பணி முன் அனுபவம் கொண்டிருக்கும்
உள்ளுரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு: வயது வரம்பு குறித்து அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் kancheepuram.nic.in என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தியிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

முகவரி:

District Social Welfare Officer, O/o District Social Welfare Office, Old DRDA Building, Collectorate Campus, Kanchipuram – 631 501.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 08-01-2024