இனி நியாயவிலை கடைகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு

0
244
Gas Price Reduced into 500
Gas Price Reduced into 500

இனி நியாயவிலை கடைகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்கும்! அரசு வெளியிட்ட அறிவிப்பு

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 35000 நியாயவிலை கடைகள் உள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தற்போது 5 கிலோ மற்றும் 10 கிலோ எடையுள்ள சிறிய ரக எல்பிஜி சிலிண்டர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் தங்கள் சொந்த பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகிறது. கிராமப்புற மக்களிடையே எல்பிஜி சிலிண்டர்களின் பயன்பாட்டை அதிகப்படுத்தவும், நியாயவிலை கடைகள் மூலம் மலிவு விலையில் பொதுமக்கள் பெறவும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து நாடு முழுவதும் உள்ள 5.32 கோடி நியாயவிலை கடைகள் மூலம் இந்த திட்டம் செயல்படும். பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் மூலம் மத்திய மாநில அரசுகளால் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

நியாயவிலை கடைகளில் உள்ள பயோமெட்ரிக் முறைகள் மூலமாகவே எரிவாயு சிலிண்டர் விநியோகமும் நடைபெறும். இதன் மூலம் ஏழ்மையான குடும்பங்கள் மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயுவை பெறமுடியும். இதனால் கிராமப்புற மக்கள் பெரிதும் பயன்பெருவார்கள்.

புதிதாக சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குவதற்கு ரூ. 1400 எனவும், 5 கிலோ கொள்ளளவு கொண்ட,எரிவாயு மட்டும் நிரப்பி தரும் சிலிண்டரின் விலை 375 ஆக இருக்கும் எனவும், தற்போது சமையல் எரிவாயுவின் விலை நிலையில்லாமல் இருப்பதால் இந்த விலையில் மாற்றம் வரலாம் என கூறப்படுகிறது.

Previous articleஎழுதாத பேனாவிற்கு சிலையா? மக்களிடத்தில் வலுக்கும் கண்டனம்
Next articleசேலத்தில் கொடூரம் 5 பேர் கொண்ட கும்பல் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!