இந்தியாவால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக அந்நாட்டு அரசு முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
மும்பை டோங்கிரி பகுதியில் காவலருக்கு மகனாக பிறந்த தாவூத் இப்ராஹிம் ,காலப்போக்கில் கட்டப்பஞ்சாயத்து ,கடத்தல் உள்ளிட்ட சர்வதேச செயல்களை செய்து வந்துள்ளார். வெடிபொருட்கள், நடிகர்களை கடத்தி பணம் மிரட்டி வாங்குவது போன்ற செயல்களால் ஏராளமான வழக்குகள் இவர் மீது உள்ளது.கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டுக்கு 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதற்கு முக்கிய குற்றவாளி தாவூத் இப்ராகிம் என இந்திய அரசு வெளியிட்டது. இதனை தொடர்ந்து மத்திய அரசு தாவூத் இப்ராஹிமை தேடும் முயற்சியை தொடங்கியது.
இதனால் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு தப்பியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுநாள் வரை தாவுத் இப்ராஹிம் தாங்கள் அடைக்கலம் கொடுக்கவில்லை என்று பாகிஸ்தான் அரசு உரியது.
இடையில் பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி கிடைப்பதை தடுக்க பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதி கண்காணிப்பு மையமான FATF 2018 ஆம்ஆண்டு பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பது தொடர்பாக பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் சேர்த்ததோடு , 2019ஆம் ஆண்டு இறுதியில் நிலைமையில் முன்னேற்றம் இல்லை என்பதால் பாகிஸ்தான் மீது முழுமையான தடை விதிக்கப்படும் என கூறியது .இதனால் பாகிஸ்தான் உலக நாடுகளிடம் இருந்து கடன் பெற இயலாது என்பதாலும் வணிகம் தடைபடுவதற்கு கூறியுள்ளனர். விதிக்கப்பட்ட காலக்கெடு கடந்த மாதம் முடிந்தது, கொரோனா ஊரடங்கால் காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருந்தது.
மேலும் தாவூத் இப்ராஹிம் சேர்ந்த 88 பெரும் தலைவர்கள் பாகிஸ்தானில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள மும்பை நிழல் உலக தாதா தாவூத் இடம்பெற்றுள்ளது.
இதன் மூலம் தாவூத் இப்ராகிமுக்கு அடைக்கலம் தர வில்லை என தொடர்ந்து தெரிவித்து வந்த பாகிஸ்தான் அரசு தற்போது பாகிஸ்தான் மண்ணில் இருப்பதாக முதல் முறையில் ஒப்புக்கொண்டுள்ளது.