பள்ளி மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வருடந்தோறும் சராசரியாக 50 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசு 800 கோடி ரூபாய் வரையில் செலவு செய்கிறது.
தற்சமயம் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் காரணத்தால் , மாணவர்களுக்கு அரசின் சார்பாக அரிசி உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் குடும்ப பொருளாதார சூழல் காரணமாக, மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக சத்துணவில் முட்டையுடன் சேர்த்து ரொட்டி வழங்க தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது.
பொருளாதார ரீதியாக பின்தங்கி இருக்கின்ற மாணவர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு வருகின்றது. இதன் மூலமாக, பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பாதியிலேயே படிப்பை விட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகவே குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் வைத்து சத்துணவுத் திட்டத்தில் முட்டையுடன் சேர்த்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக ரொட்டி வழங்க அரசு ஆலோசனை செய்து வருகிறது. இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் முடிவு செய்வார் என்று தெரிகிறது