11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! ஆய்வு நிலையம் சொன்ன தகவல்!

0
79
Chance of rain in 11 districts! Information from the research station!
Chance of rain in 11 districts! Information from the research station!

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! ஆய்வு நிலையம் சொன்ன தகவல்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் சென்னை, ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,வேலூர், திருப்பத்தூர் ,ராணிப்பேட்டை ,நீலகிரி ,கோவை ,ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வருகின்ற 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
இன்று முதல் வருகின்ற 19 ம் தேதி வரை மத்திய மேற்கு வங்க கடல் ஆந்திர கடலோரப் பகுதியில் தென்கிழக்கு வங்க கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதி, குமரிக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு இலங்கை பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.