அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

Photo of author

By Parthipan K

அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!

தற்பொழுது பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி அவதி படுகின்றனர்.

கோடை வெயிலின் தாக்கம் இன்னும் பல்வேறு மாவட்டங்களில் குறையவில்லை அதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்படுகிறது.

அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் இன்றளவும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.இதனால் அந்த மாநில மக்கள் மிகவும் சிரமான சூழலுக்கு ஆளாகின்றனர்.எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு அதிக அளவில் வெயிலின் தாக்கம் இருப்பதால் மக்களின் மின் தேவையும் அதிகரித்துள்ளது.

இந்த வகையில் மின் தேவை அதிகரித்துள்ளதால் அதனை கட்டுக்குள் வைத்திருக்க அந்த மாநில அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அரசு மின் தேவையை கட்டுபடுத்தும் விதமாக அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றி உள்ளது. அந்த வகையில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அதனை சமாளிக்கும் விதமாக இனி வெயில் அதிகரிக்கும் முன்பாக காலை 7.30 மணிக்கு அனைத்து ஊழியர்களும் அலுவலகங்களுக்கு வர வேண்டும்.

அதன் பிறகு நற்பகல் 2 மணிக்கு அனைத்து ஊழியர்களும் பணி முடிந்து சென்று விடலாம் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று முதல் அமல்படுத்த படுவதாக  அறிவித்த நிலையில் மீண்டும்  பழைய நேரத்தை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.அந்த வகையில் வழக்கம் போல் காலை 9 மணிக்கு அரசு அலுவலகங்கள் தொடங்கப்பட்டு மாலை 5 மணி வரை செயல்படும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட கால நேரம் வருகின்ற 17ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இவை அனைத்தும் அதிக அளவில் தேவைப்படும் மின் தேவையை கட்டுக்குள் வைத்திருக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையாகும்.