அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு! முதல்வர் வெளியிட்ட அடுத்த அறிவிப்பு!
தமிழர்களுக்கு என்று உரித்தான நாள்தான் பொங்கல். இந்த பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து நமக்கு உணவு தரும் விவசாய பூமிக்கு நன்றி தெரிவிப்பர். இரண்டு வருடங்களாக பொங்கல் திருவிழா களை இழந்து காணப்படுகிறது. இதற்குக் காரணம் கொரோனா தொற்று தான். தற்பொழுது இந்த கொரோனாவானது உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இந்த சூழலில் முழு ஊரடங்கு போடுவது குறித்தும் பேசப்பட்டு வருகிறது.
இவ்வாறு இருக்கும் வேளையில் மக்கள் எப்படி பொங்கல் பண்டிகை கொண்டாடும் முடியும் என்று பல சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி தற்போது உள்ள திமுக அரசு பொங்கல் பரிசாக இருபத்தி ஒரு பொருட்கள் அடங்கிய தொகுப்பை மட்டுமே வழங்குகிறது. வருடந்தோறும் பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்கி வந்த நிலையில் இம்முறை பணமின்றி பொங்கல் தொகுப்பு மட்டும் வழங்கி வருவது மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அவ்வாறு வழங்கப்படும் பொங்கல் தொகுப்பும் தரமற்றதாக இருப்பதாக பல புகார்கள் எழுந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் புளியுடன் பல்லி இறந்த நிலையில் இருந்ததாக புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து 2.15 கோடி பேருக்கு வழங்க உள்ள இந்த பொங்கல் பரிசானது தரமற்றதாக இருப்பதை கண்டு மக்கள் தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இவ்வாறு புகார்கள் எழுந்து வந்த நிலையில், முன்தினம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திடீரென்று நியாயவிலை கடைக்கு சென்று கொடுக்கப்பட்டிருந்த பொங்கல் பரிசு தொகுப்பை சோதனையிட்டார்.
அதனையடுத்து உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மக்களிடம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, தற்போது வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்பு ஏதேனும் தரமற்ற காணப்பட்டாலோ அல்லது பொங்கல் தொகுப்பு வழங்குவதில் ஏதேனும் முறைகேடு நடந்தாலும் கட்டணமில்லா எண்ணான 180059935430 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று கூறினார்.அவ்வாறு அளிக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதனையடுத்து முதல்வரும் பொங்கல் பரிசு தொகுப்புகள் தரமானதாக வழங்கப்படுகிறதா என்பதை நேரடியாக சென்று ஆய்வு செய்தார். சிலர் பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்றதாக வழங்கப்பட்டு வருகிறது என வதந்திகளை பரப்பி வருகின்றனர்.இந்த பரவி வரும் வதந்திகளை தடுக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் தொடர்ந்து நியாயவிலை கடைகளில் மக்களுக்கு தரமான பொருள்கள் கிடைக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனால் இனி மக்களுக்கு தரமான பொருள் கிடைக்கிறதா என்பதை மாவட்ட ஆட்சியர் முதற்கொண்டு சோதனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.