நடிகை குஷ்பூ மருத்துவமனையில் திடீர் அனுமதி! பிரார்த்திக்கும் ரசிகர்கள்!

0
118
Actress Khushboo admitted to hospital Praying fans!
Actress Khushboo admitted to hospital Praying fans!

நடிகை குஷ்பூ மருத்துவமனையில் திடீர் அனுமதி! பிரார்த்திக்கும் ரசிகர்கள்!

கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக விடாமல் மக்களைத் துரத்தி வருகிறது. இத்தொற்றுக்கு பாமர மக்கள் முதல் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அரசியல் தலைவர்கள் பலர் இந்த தொற்றால் உயிரை இழக்க நேரிட்டது. அதேபோல பல சினிமா பிரபலங்களும் இந்த தொற்றால் உயிரை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. அந்த வரிசையில் இசையின் ஜாம்பவான் எஸ்பிபி யின் இழப்பு சற்றும் ஈடாகாதது. அவரைத் தொடர்ந்து பல நடிகர்கள் இக்தொற்றுக்கு பலியாகி வந்தனர்.

பல வருடங்கள் கழித்து தற்போது தான் திரையுலகில் மீண்டும் தனது பயணத்தை நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்கள் தொடங்கினார். அவ்வாறு இவர் வெளிநாட்டு பயணம் சென்று இந்தியா திரும்பும் பொழுது இவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்து வந்தது.மேற்கொண்டு சோதனை செய்ததன் மூலம் கொரோனா தொற்றானது உறுதியானது. அதனையடுத்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வடிவேலுவை போலவே கமல்ஹாசனுக்கும் தொற்று உறுதியானது.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து சிம்புவிற்கு லேசான அறிகுறிகள் இருந்ததால் சோதனை மேற்கொண்டார். சோதனையின் முடிவில் அவருக்கு நெகட்டிவ் வந்தது என்ற முடிவு வந்தது. இவர்களின் வரிசையில் தற்போது நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா தொற்றானது உறுதியாகியுள்ளது. நடிகர் அருண்விஜய் அவரது வீட்டிலேயே தன்னை தனிமை படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் பாதுகாப்புடன் வீட்டிலிருந்து சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருவதாக கூறினர்.இதனையடுத்து தற்பொழுது நடிகை மற்றும் அரசியல்வாதியுமான குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.மேலும் அவர் விரைவில் மீண்டு குணமாகி வர பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து சினிமா பிரபலங்களை இந்த தொற்றானது குறிவைத்து தாக்கி வருகிறது.தொற்று வேகமாக பரவி வரும் இந்த சூழலில் மக்கள் அனைவரும் அரசாங்கம் கூறும் பாதுகாப்பு விதி முறைகளை கடைப்பிடித்து நடக்கவேண்டும். அப்பொழுதுதான் தொற்றின் பாதிப்பில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.