பெண் தொழில் முனைவோருக்கான அரசு திட்டங்கள்!! அடடா இத்தனை இருக்கா!!

மத்திய அரசு மற்றும் மாநில அரசு பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செய்து வருகின்றன. இதை நலத்திட்டங்களில் பல லட்சம் கணக்கான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். எனினும் பெண்களுக்கான தொழில் முனைவோர் திட்டங்கள் குறித்த இங்கு பெரிதளவில் மக்கள் பயன்படுத்துவதாக தெரியவில்லை. அதிலும் எத்தனை வகையான தொழில் முனைவோர் திட்டங்கள் இருக்கிறது என்பது கூட அனைவருக்கும் முழுமையாக தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

மத்திய அரசு வழங்கக்கூடிய பெண் தொழில் முனைவோர் திட்டங்கள் பின்வருமாறு :-

✓ பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம்

✓ பெண்களுக்கான தென்னை நார் திட்டங்கள்

✓ ஸ்டாண்ட்-அப் இந்தியா

✓ முத்ரா கடனுதவி திட்டம்

✓ பெண் தொழில்முனைவோரை ஆதரிக்கும் வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளால் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள்

✓ மகிளா உதயம் நிதி யோஜனா

✓ தேனா சக்தி திட்டம்

✓ பெண் தொழில்முனைவோருக்கான ஸ்த்ரீ சக்தி தொகுப்பு

✓ சென்ட் கல்யாணி திட்டம்

மக்களவையின் கேள்வி நேரத்தின் பொழுது மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் இந்த திட்டங்கள் குறித்தும் இதனால் பெண் தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்டு வரும் மானியங்கள் குறித்தும் தெரிவித்திருக்கிறார்.

தொழில் முனைவோர் ஆக மாற நினைக்கும் பெண்கள் உடனடியாக இந்த திட்டங்களின் கீழ் இணைந்து உங்களுடைய ஸ்டார்ட் அப் மற்றும் தொழில்களை துவங்கி பயன்பெறுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.