மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு உதவித்தொகை! மாவட்ட ஆட்சியரின் புதிய  வழிகாட்டு நெறிமுறை!   

0
148
Government Scholarship for Disabled People! District Collector's New Guidelines!
Government Scholarship for Disabled People! District Collector's New Guidelines!
மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு உதவித்தொகை! மாவட்ட ஆட்சியரின் புதிய  வழிகாட்டு நெறிமுறை!
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் கலந்து கொண்டு உதவிதொகை அரசு சான்றிதழை வழங்கி,கொரோனா பேரிடர் காலத்தில் அரசு அறிவித்துள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வெளியே செல்லும்போது அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அரசு கோப்புகளை ஆய்வு செய்து இ சேவை மையங்களில் மக்களுக்கு வழங்கி வரும் பயன்பாடுகளை உரிய முறையில் கிடைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் சிந்துவட்டாட்சியர்ராணி, சமூகநல திட்ட வட்டாட்சியர் இளங்கோவன்,வருவாய்ஆய்வாளர்கள்செல்வி,கனகமணி,கிராம நிர்வாக அலுவலர்கள்
தங்கமுத்து,குமார்,சோனைமுத்து. அகிலன், கற்பகம் மற்றும்மாற்றுத்திறனாளிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.
Previous articleமுதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன்!
Next articleஐடிஐயில் உதவித்தொகையோடு சேர்ந்து படிக்கலாம்! இதோ அதற்கான முழு விவரங்கள்!