அரசு பள்ளி மாணவர்கள் இங்கு செல்ல இலவசம்! முதல்வரின் அதிரடி உத்தரவு!

0
119
One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!
One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

அரசு பள்ளி மாணவர்கள் இங்கு செல்ல இலவசம்! முதல்வரின் அதிரடி உத்தரவு!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாணவர்களுக்கு பல நல உதவிகளை செய்து வருகிறார்.அவரது மகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அவரது தொகுதியில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு படிப்பதற்கு டாப் மற்றும் கணினி வழங்கி உதவி வருகிறார். தற்பொழுது 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடைபெற்று வருகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு காண பள்ளிகள் திறக்கப்படவில்லை.அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் மிகப்பழமையான காவல் ஆணையரக கட்டடமானது 6 கோடியே 47 லட்சம் ரூபாயில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியமாக மாற்ற அமைக்கப்பட்டுள்ளது.இந்த தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமானது மேல் மற்றும் கீழ் என இரண்டு தளங்களாக அமைத்துள்ளனர்.இந்த அருங்காட்சியகத்தில் வருபவர்களை கண்டறிய கண்காணிப்பு கேமரா மற்றும் ஏதேனும் தீ விபத்து நடந்தால் அதனை தடுக்கும் விதமாக தீ தடுப்பு சாதனங்கள்,வருபவர்கள் குடிப்பதற்கான குடிநீர் வசதி மழைநீர் சேகரிப்பு வசதி ,சிற்றுண்டி போன்றவற்றை உள்ளடக்கி அமைத்துள்ளனர்.

இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் இன்று திறந்து வைத்தார். பொதுமக்கள் அனைவரும் இம்மாதம் 30ஆம் தேதி வரை இலவசமாக இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட அனுமதி அளித்துள்ளனர்.இந்த அருங்காட்சியகத்தை இலவசமாக காண  வரும் பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் என அனைவருக்கும் இம்மாதம் 30ஆம் தேதி கடைசி நாள்.அன்றுடன் இலவச பார்வை முடிந்துவிடும். அதனையடுத்து அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அருங்காட்சியகத்தை பார்க்க இலவச கட்டணம் என்று கூறியுள்ளனர்.