அரசு வேலைவாய்ப்புகளில், தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை முறை படுத்துகின்ற சட்ட திருத்த மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
பட்டப்படிப்பு படித்து முடித்த பட்டதாரிகளுக்கான அரசு வேலை வாய்ப்புக்கு, பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தகுதியும் மற்றும் பத்தாம் வகுப்பு தகுதிக்கான 6 முதல் 10 வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர்.
ஏறத்தாழ எட்டு மாதங்களுக்குப் பிறகு, ஆளுநர் ஏன் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதைத் தொடர்ந்து ஆளுநருக்கு அழுத்தம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த புதிய சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனால் தமிழ் வழியில் பயின்றவர்கள் பலர் பலனடையும் சூழல் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.