2025 ஆம் ஆண்டுக்கான முதல் சட்ட பேரவையின் முதல் கூட்டம் சமீபத்தில்( ஜனவரி 6) நடந்து முடிந்தது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் ஆரம்பிப்பது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போதைய ஆளுநர் ஆர். என்.ரவி அவர்கள் உரையை வாசிக்காமலேயே, சட்டசபையை விட்டு வெளியேறினார். அதைத்தொடர்ந்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில், “தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் தேசிய கீதமும், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டமும் அவமதிக்கப்பட்டுள்ளது” என்று பதிவிட்டு இருந்தனர். ‘2024 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையும் இதே காரணத்தினால் ஆளுநர் நிராகரித்துள்ளார்’ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவரது செய்திகள் தொடர்ந்து பரவலாக பேசப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது, இவரது வருமானம் குறித்தும், இவரது ஒரு நாள் செலவு குறித்தும் பட்டியல் ஒன்று தயாராகியுள்ளது. அதில் அவரது ஆண்டு வருமானம் ஆனது 42 லட்சம், மேலும் வீட்டு பொருட்கள் முதல் விருந்தோம்பல் வரை அனைத்தும் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் ஒதுக்கிடப்பட்டு வருகின்றது. ஆண்டொன்றிற்கு, விலை விவரம் பின்வருமாறு,
ஆளுநர் மேம்பாட்டு நிதி 4 கோடி எனவும், வீடு மட்டும் வீட்டு பொருட்களை புதுப்பிக்க ஏழரை லட்சம் ரூபாயும், அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பங்களாவை பராமரிக்க ரூ. ஒரு கோடியும், விருந்தோம்பலுக்கு மட்டும் ரூபாய் 50 லட்சமும், கலாச்சார நடவடிக்கைக்கு ரூபாய் 4 லட்சமும், அலுவலக செலவுகள் ரூபாய் 45 லட்சமும், நூலகம் விளையாட்டிற்கு ரூபாய் 50 லட்சமும், பயணத்திற்காக ரூபாய் 50 லட்சமும், தோட்டப் பராமரிப்புக்காக ரூபாய் 30 லட்சமும், மின்சார செலவுக்காக ரூபாய் 70 லட்சமும், தண்ணீருக்காக மட்டுமே ரூபாய் 70 லட்சமும் ஆக மொத்தமாக இவரது சம்பளம் சேர்த்து வருடத்திற்கு 8 கோடியே 17 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது. இதில் ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசின் பங்களிப்பு கிடையாது. இவை அனைத்தும் தமிழர்களின் வரி பணம் மட்டுமே என அந்தப் பதிவில் பதிவிடப்பட்டுள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில், பெரும்பாலும் பகிரப்பட்டும் வருகின்றது.