தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கேபிள் டிவி மற்றும் வாடிக்கையாளர்களின் ஒரே கோரிக்கையாக இருந்த எச்டி செட்டாப் பாக்ஸ் உடன் கூடிய சேனல்கள் திட்டத்தினை அறிமுகப்படுத்த பட உள்ளதாகவும், விரைவில் இது பயனர்களை வந்தடையும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
குறைந்த விலையில் தரமான கேபிள் சேவையை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது.தொடர்ந்து கேபிள் மூலம் சேவை வழங்கப்பட்ட நிலையில், அது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு செட் ஆப் பாக்ஸ்கள் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து இதுதொடர்பாக டேக்டிவி (TACTV) சார்பில் ஆபரேட்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டும் வரும் நிலையில் அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அந்தக் கோரிக்கையில், ஹெச்டி செட்டாப் பாக்ஸ்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஹெச்டி செட்டாப் பாக்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக விநியோகஸ்தர்கள் மேலாளர்கள் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் தனியார் உள்ளூர் தொலைக்காட்சி மீண்டும் ஒளிபரப்ப நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சிக்னல் இல்லாத பகுதிகளில் சந்தாதாரர்கள் மற்றும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் சென்னை தலைமை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் சிக்னல் இல்லாத பகுதிகளுக்கு உடனடியாக சிக்னல் வழங்கப்படும் என்று கேபிள்டிவி வாரிய தலைவர் தஞ்சை ஜீவா அவர்கள் தெரிவித்தார்.