8 ஆம் வகுப்பு படித்த பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு!! மாதம் நல்ல சம்பளம் பெற அப்ளை பண்ணுங்க!!

Photo of author

By Gayathri

தமிழக அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையானது ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இந்த ஒன் ஸ்டாப் சென்டர் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி கொண்டிருக்கிறது.அந்தவகையில் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள வழக்குப் பணியாளர்,பாதுகாவலர்,பல்நோக்கு உதவியாளர் பணிக்கு தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை

பணியிடம்: கோயம்பத்தூர்

பணியின் பெயர்:

1)வழக்குப் பணியாளர்
2)பாதுகாவலர்
3)பல்நோக்கு உதவியாளர்

கல்வித் தகுதி:

வழக்குப் பணியாளர்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் சமூகப்பணி,பொது நிர்வாகம்,உளவியல் உள்ளிட்ட படிப்புகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பாதுகாவலர்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 8 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பல்நோக்கு உதவியாளர்

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 8 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க உள்ள நபர்களுக்கு அதிகபட்ச வயது தகுதி 44 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

மாத ஊதியம்:

வழக்குப் பணியாளர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாதுகாவலர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.12,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பல்நோக்கு உதவியாளர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

உள்ளூரை சார்ந்த பெண்கள் முன் அனுபவம் அடிப்படையில் பணியமர்த்தபட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

முகவரி:

மாவட்ட சமூகநல அலுவலர்,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,பழைய கட்டிடம்,தரைதளம், கோவை 641018.

தொலைபேசி எண்: 0422-2305156

விண்ணப்பிக்க இறுதி நாள்: 20-11-2024