சென்னையில் அரசு வேலை!! சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன!

0
161
#image_title

சென்னையில் அரசு வேலை!! சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன!

தலைநகர் சென்னையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன் படி குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் காலியாக உள்ள ‘Legal Advisor’ பணிக்கு தகுதி விருப்பம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை தபால் வழியாக வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை: அரசுப் பணி

நிறுவனம்: சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம்

பதவி: Legal Advisor

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: ஒன்று

பணிக்கான தகுதி: Legal Advisor பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றால் அரசு அங்கீகரித்த கல்லூரியில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.அதுமட்டும் இன்றி பணி சார்ந்த துறையில் 5 ஆண்டுகள் பணி புரிந்த முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களின் வயது 30க்குள் இருக்க வேண்டும்.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபருக்கு மாதம் 1 லடசம் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

தேர்வு முறை:

நேர்காணல்

எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

Legal Advisor பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 10-04-2024