தொடர்ந்து காவு வாங்கும் அரசு மதுபானம்!! திருச்சி அடுத்து சேலத்திலும் ஓர் உயிரிழப்பு!!

0
186
#image_title

தொடர்ந்து காவு வாங்கும் அரசு மதுபானம்!! திருச்சி அடுத்து சேலத்திலும் ஓர் உயிரிழப்பு!!

அரசு நடத்தி வரும் டாஸ்மாக் கடைகளில் உள்ள சரக்குகளால் தற்பொழுது ஒவ்வொரு மாவட்டத்திலும் சிலர் உடல்நலம்  பாதிப்படைந்தும் உயிரிழந்தும் வருகின்றனர். அந்த வகையில் சேலத்தில் எடப்பாடி சேர்ந்த ஒருவர் தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி சேர்ந்த சேகர் என்பவர் நேற்று மாலை கல்ளுக்கடை என்ற பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் சரக்கு ஒன்றை வாங்கியுள்ளார். பின்பு அங்கிருக்கும் பாரிலேயே அதனை சாப்பிட்டு உள்ளார்.

இவ்வாறு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திலேயே திடீரென சேகர் மயக்கம் அடைந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர்.

சேகரை சோதித்த மருத்துவர்கள் இவர் முன்னதாகவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்பு அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.சேகர் முன்னதாகவே உடல்நல பிரச்சனையால் இருந்துள்ளார், இச்சமயத்தில் மது அருந்தியது அவரது உயிரிழப்பிற்கு காரணமாகிவிட்டது என்பது போல் காவல்துறையினர் காரணம் கூறுகின்றனர்.

ஆனால் இது போல திருச்சி மற்றும் ஒரு சில மாவட்டங்களில் மது அருந்தி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.தற்பொழுது இது ரீதியான உயிரிழப்புகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Previous articleதொடரும் கனமழை!! மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!!
Next articleஇது இல்லாததால் கல்லூரியில் சேர முடியாத விரக்தி!  மாணவி எடுத்த விபரீத முடிவு போராட்டத்தில் உறவினர்கள்!