சென்னையில் படிப்படியாக உயர்வு! பெண்கள் உற்சாகம்!
தமிழக தேர்தல் வாக்குறுதியில் திமுக அரசு பெண்களுக்கு கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கப்படும் என கூறியிருந்த நிலையில். அது தற்போது திமுக ஆட்சியில் நடைமுறைக்கு வந்துள்ளது.வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மட்டுமின்றி வீடுகளில் உள்ள பெண்கள் அக்கம் பக்கத்திற்கு சென்று வருவதற்காகவும் இந்த கட்டண இல்லா பயண சீட்டு திட்டம் பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என கூறப்படுகிறது.
இதனால் போக்குவரத்திற்கு ஏற்படும் செலவுகளை மாதம்தோறும் அரசானது வழங்கி வருகிறது. இந்நிலையில் சென்னையை பொருத்த வரை இந்த திட்டத்தின் முதலில் குறைந்த ஐந்து லட்சம் பேர் இலவசமாக பயணம் செய்த நிலையில் ஆனால் தற்போது படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் இப்போது 11 லட்சமாக உயர்ந்துளளதாகவும் கூறப்படுகிறது.
தினம்தோறும் சராசரியாக பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் செய்கின்றார்கள். இது குறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் பேசினார்கள். அப்போது கட்டணம் இல்லாமல் பயணம் செய்யக்கூடிய பேருந்துகளை பெண்கள் எளிதாக கண்டறியும் வகையில் பிங்க் நிறம் பேருந்தின் முன் மற்றும் பின் பகுதிகளில் பூசப்பட்டுள்ளது எனவும் கூறினார்கள்.
இதன் மூலம் மற்ற பேருந்துகளில் ஏறுவது குறைந்துள்ளது. இந்த பிங்க் நிற பேருந்தை மூதாட்டிகள் கூட எளிதில் அடையாளம் காண்கின்றனர் எனவும் கூறப்படுகிறது. கடந்த பதினாறாம் தேதியில் இருந்து 11லட்ச பெண்கள் பயணித்துள்ளனர் என புள்ளி விவரம் கூறுகிறது என குறிப்பிட்டுள்ளார்.