அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் திறப்பு! பிரதமர் மோடி பயணம்!

Photo of author

By Preethi

அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் திறப்பு! பிரதமர் மோடி பயணம்!

Preethi

Updated on:

அபுதாபியில் பிரம்மாண்ட இந்து கோயில் திறப்பு!
பிரதமர் மோடி பயணம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் மிகப்பெரிய இந்து கோயிலை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். முன்னதாக இன்று (பிப்.13) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

அயோத்தியில் மிக பிரம்மாண்ட கோயில் திறப்பு விழாவிற்கு பிறகு அபுதாபியில் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட இடத்தில் மிகப் பெரிய இந்து கோவில் திறக்கப்பட உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர் ஹேக் நஹ்யான் முபாரக் அல் நஹ்யான் இந்த கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். ஐக்கிய அரபு அமீரகத்தின் 7 எமிரேட்ஸ்களின் அடையாளமாக 7 தூண்கள் கட்டப்பட்டுள்ளன. 102 அடி உயரம் கொண்ட இக்கோவிலில் 402 தூண்கள் உள்ளன. பிரம்மாண்டமான கோயில் சுமார் 900 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி நாளை (பிப்.14) திறந்து வைக்கிறார்.

திறப்பு விழாவிற்கு முன்னதாக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்களிடம் இன்று (பிப்.13) உரையாற்றுகிறார். அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த மெகா நிகழ்வுக்கு அஹ்லன் மோடி என்று பெயரிடப்பட்டுள்ளது. அதற்கு ஹலோ மோடி என்று அர்த்தம். இதற்காக விழா மைதானமும் பிரம்மாண்டமாக தயாராகிக் கொண்டு உள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அபுதாபி புறப்பட்டுள்ளார்.