மீண்டும் டெல்லிக்கு படையெடுத்த விவசாயிகள்… 144 தடையும்.. திறந்தவெளி சிறைச்சாலையும்?!

0
186
#image_title

மீண்டும் டெல்லிக்கு படையெடுத்த விவசாயிகள்… 144 தடையும்.. திறந்தவெளி சிறைச்சாலையும்?!

மத்திய அரசுடன் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து விவசாயிகள் பேரணி என்று டெல்லிக்கு படையெடுத்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லி-ஹரியானா எல்லையில் ஒரு வருடத்திற்கும் மேலாக மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவ்வப்போது மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற்றது. மேலும் போராட்டத்தின் இறுதி வேளாண் விலைப் பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தை கைவிட்டனர். தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

முன்னதாக விவசாய பேரணியை தடுக்க மத்திய அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடுகள் ஏதும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தையில் தோல்வி அடைந்ததை அடுத்த 200க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு புறப்பட்டு உள்ளனர்.

“குறைந்தபட்ச ஆதார விலைக்கு தெளிவான சட்ட உத்தரவாதம், விவசாயிகள் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான சட்ட ரீதியான உத்தரவாதங்கள், விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், லகீம்பூர் கேரியில் நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் நீக்கப்பட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 200 விவசாய சங்கத்தினருக்கும் மேலாக டெல்லியை நோக்கி பயணித்துள்ளனர்.

விவசாயிகள் தங்களது டிராக்டர்களுடன் பஞ்சாபின் ஃபதேகர் சாகிப்பில் இருந்து அம்பாலா அருகே உள்ள ஷம்பூ நோக்கி பேரணியாக தங்களது பயணத்தை தொடங்கியுள்ளனர். மேலும் இரு சக்கர வாகனங்களில் பேரணியில் வந்த விவசாயிகள் சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விவசாயிகள் பேரணியை தொடர்ந்து டெல்லியில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் பவானா மைதானத்தை ஒன்றிய அரசு திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்ற பரிந்துரை செய்தது. ஆனால் டெல்லி மாநில அரசு இந்தப் பரிந்துரையை நிராகரித்துள்ளது.

author avatar
Preethi