இரைப்பையில் புண் இருந்தால் வயிறு எரிச்சல்,மலம் கழிப்பதில் சிரமம்,நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எனவே இரைப்பை புண் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை செய்து பலனடையுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)கீழாநெல்லி வேர் பொடி – ஒரு தேக்கரண்டி
2)அதிமதுர சூரணம் – ஒரு தேக்கரண்டி
3)கடுக்காய் சூரணம் – ஒரு தேக்கரண்டி
4)கோரைக்கிழங்கு சூரணம் – ஒரு தேக்கரண்டி
5)தண்ணீர் – ஒரு கப்
பயன்படுத்தும் முறை:-
கீழாநெல்லி வேர் பொடி,அதிமதுரப் பொடி,கடுக்காய் பொடி,கோரைக்கிழங்கு பொடி ஆகியவற்றை தலா 100 கிராம் அளவிற்கு நாட்டு மருந்து இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும்.அடுத்து இதனை ஒன்றாக மிக்ஸ் செய்து பாட்டிலில் சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும்.
ஒரு கப் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு கீழாநெல்லி வேர் பொடி கலவையில் இருந்து நான்கு தேக்கரண்டி அளவு அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை வடிகட்டி குட்டித்தால் இரைப்பை புண்கள் விரைவில் குணமடையும்.
தேவையான பொருட்கள்:-
1)முள்ளங்கி – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கப்
பயன்படுத்தும் முறை:-
முதலில் ஒரு முள்ளங்கியை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதன் மேல் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் மிக்சர் ஜாரில் முள்ளங்கி துண்டுகளை போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த முள்ளங்கி ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரைப்பை புண்கள் சீக்கிரம் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)தயிர் – ஒரு கப்
2)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:-
ஒரு கிண்ணத்தில் கெட்டி பசுந்தயிரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை பொடித்து அதில் மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த தயிரை உட்கொண்டு வந்தால் இரைப்பை புண்கள் குணமாகும்.வெறும் வயிற்றில் காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது.வெறும் வயிற்றில் குளிர்ச்சி நிறைந்த இயற்கை பொருட்களை சாப்பிடலாம்.