நாம் அறிந்திராத பாட்டி வைத்தியம்!! சளி முதல் கால் வலி வரை.. அனைத்தையும் குணப்படுத்திக் கொள்ளலாம்!!

Photo of author

By Divya

நாம் அறிந்திராத பாட்டி வைத்தியம்!! சளி முதல் கால் வலி வரை.. அனைத்தையும் குணப்படுத்திக் கொள்ளலாம்!!

Divya

கீழ்கண்ட பாட்டி வைத்தியங்கள் செய்து நம் உடல் நல பாதிப்புகளை குணப்படுத்திக் கொள்ளாலாம்.

**துளசி இலைகளை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் சளி தொந்தரவு நீங்கும்.ஓமவல்லி இலையை அரைத்து சாறு எடுத்து குடித்தால் சளி தொந்தரவு அகலும்.

**வறட்டு இருமல் குணமாக தேனை குழைத்து சாப்பிடலாம்.ஓமவல்லி இலையை அரைத்து சாறு எடுத்து தேன் குழைத்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

**துளசி சூரணம்,மிளகு,சுக்கு போன்றவற்றை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் காய்ச்சல் பாதிப்பு குணமாகும்.

**வயிறு வலி குணமாக ஓமத்தை பொடித்து பாலில் கலந்து பருகி வரலாம்.விளக்கெண்ணெயை தொப்புள் மீது ஊற்றி தடவினால் வயிறு வலி குணமாகும்.

**வாழைப்பூவை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

**வெள்ளரி விதைகளை அரைத்து பாலில் கலந்து பருகி வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும்.

**குடற் புழுக்கள் வெளியேற வேப்பம் பழத்தை தினமும் இரண்டு என்ற எண்ணிக்கையில் சாப்பிடலாம்.

**தூதுவளை இலையை அரைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு நீங்கும்.

**மிளகை பொடித்து ஒரு கிளாஸ் நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் தொண்டை கட்டு குணமாகும்.

**மருதாணி இலையை அரைத்து கால் விரல்களில் பூசி வந்தால் நகசுத்தி,நகம் சொத்தையாவது தடுக்கப்படும்.

**சுக்கை இடித்து நீரில் கொதிக்க வைத்து பருகி வந்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.

**கீழாநெல்லி இலையை அரைத்து கொட்டை பாக்கு வடிவில் எடுத்துக் கொண்டால் காமாலை குணமாகும்.

**பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் கல்லீரல் கோளாறு நீங்கும்.

**வாழைப்பழத்தை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீர்ணக் கோளாறு பிரச்சனை சரியாகும்.

**பிரண்டை இலையை உலர்த்தி பொடியாக்கி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் மெலிந்த உடல் வலிமையாகும்.

**உளுந்து பருப்பை பொடித்து கஞ்சி செய்து பருகி வந்தால் இடுப்பு எலும்பு வலிமை அதிகரிக்கும்.

**பாதாம் பருப்பை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.