அவரச காலங்களில் கை கொடுக்கும் நம் பாட்டி கால வைத்தியங்கள்!!ள்!! 100% பலன் கிடைக்கும்!!

Photo of author

By Vijay

கடந்த காலங்களில் நம் பாரம்பரிய வைத்திய முறைகளை பலரும் பின்பற்றி வந்தனர்.ஆனால் தற்பொழுது அவை மெல்ல மெல்ல மறக்கப்பட்டு வருகிறது.நம் உடலில் உள்ள சிறு மற்றும் பெரிய நோய் பாதிப்புகளை முழுமையாக குணமாக்கும் பாட்டி வைத்தியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இரத்த சோகை

முருங்கை இலையை காயவைத்து போடி செய்து நீரில் கலந்து பருகி வந்தால் இரத்த சோகை குணமாகும்.

முருங்கை இலை பொடி மற்றும் எலுமிச்சை சாறை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.

குளிர்கால சரும பிரச்சனை

தினமும் ஒரு கப் தேங்காய் பால் குடித்து வந்தால் வறண்ட சருமம் பால் போன்று மிருதுவாக இருக்கும்.தேங்காய் எண்ணெயை முகத்திற்கு தடவி வந்தால் சரும வறட்சி நீங்கும்.

சிறுநீரக கல்

வாழைத்தண்டை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் அனைத்தும் கரைந்துவிடும்.

வாழைத்தண்டில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இதை உட்கொள்ளும் பொழுது மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை அனைத்தும் சரியாகும்.

வெடிப்பு புண்கள்

அரச இலையை மைய அரைத்து சிறிது மஞ்சள் தூள் கலந்து வெடிப்புகள் மீது பூசினால் அவை சீக்கிரம் ஆறும்.

தூக்கமின்மை

தினமும் இரவு ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு ஒரு கிளாஸ் பசும் பால் குடித்தால் படுத்தவுடன் தூக்கம் வரும்.

நீரிழிவு நோய்

சிறு குறிஞ்சான் இலையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தால் நீரிழிவு நோய் பாதிப்பு குணமாகும்.

வாயுத் தொல்லை

சூடான நீரில் கால் தேக்கரண்டி சீரகத் தூள் கலந்து பருகினால் வாயுத் தொல்லை கட்டுப்படும்.

பெருங்காயத்தை நீரில் கலந்து பருகினால் வாயுத் தொல்லை முழுமையாக கட்டுப்படும்.

உடல் சோர்வு

துளசி இலையை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும்.

சீழ் புண்கள்

கருஞ்சீரகத்தை அரைத்து விழுதாக்கி சீழ் கொப்பளங்கள் மற்றும் புண்கள் மீது பூசி வந்தால் அவை சீக்கிரம் ஆறும்.