நுரையீரல் சுத்தமாகி சுறுசுறுப்புடன் இருக்க பாட்டி வைத்தியம்!

Photo of author

By Amutha

நுரையீரல் சுத்தமாகி சுறுசுறுப்புடன் இருக்க பாட்டி வைத்தியம்!

இதனை 2 ஸ்பூன் வீதம் ஐந்து நாட்கள் தொடர்ந்து குடித்து வர அசுத்தமான நுரையீரல் சுத்தமாகி சுறுசுறுப்புடன் இயங்கும்.

சிகரெட் பிடிப்பவர்களுக்கு தான் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் என்று இல்லை. இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக சிறுவர் சிறுமியர்கள் கூட நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம். இந்த பானத்தை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மாதத்திற்கு இரண்டு முறை எடுத்து வர உங்கள் நுரையீரல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் இருக்கும்.

5 நாட்களுக்கு தேவையான  அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளது

* ஒரு பாத்திரத்தில் கால் லிட்டர் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி போடவும். இஞ்சி சரியான கிருமி நாசினி மற்றும் நுரையீரலில் தேங்கியுள்ள சளி மற்றும் அழற்சியை போக்கக்கூடியது.

* அடுத்து இதில் கால் வெங்காயம் எடுத்து பொடி பொடியாக கட் பண்ணி போடவும். பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் வெங்காயத்தை பச்சையாகவே எடுத்துக் கொள்ளலாம். இது ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்யும்.

*  அடுத்து கால் ஸ்பூன் மஞ்சள் தூள் போடவும். அடுத்து பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க விடவும். ஒரு பங்கு தண்ணீர் அரை பங்காக மாறும் அளவு கொதிக்கவிட்டு எடுத்துக்கொள்ளவும்.

* நன்றாக கொதித்ததும் இதை இறக்கி ஆறவைத்து வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்கவும்.இதில் ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்து ஸ்டோர் செய்யவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டும்.

* ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்தவுடன் அதன் குளிர் தன்மை குறைந்த உடன் பயன்படுத்த வேண்டும். இதை காலை உணவுக்கு பின் ஒரு ஸ்பூன் மீண்டும் இரவு உணவுக்கு பின் ஒரு ஸ்பூன் என ஐந்து நாட்கள் குடிக்கலாம்.

இதை அடிக்கடி பயன்படுத்தினால் உங்கள் நுரையீரல் கண்டிப்பாக சுத்தமாகி சுறுசுறுப்புடன் ஆரோக்கியத்தோடு இயங்கும்.