இரண்டு ஏலக்காயை தட்டி பாலில் போட்டு குடித்து பாருங்கள்… இதனால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்…

Photo of author

By Sakthi

இரண்டு ஏலக்காயை தட்டி பாலில் போட்டு குடித்து பாருங்கள்… இதனால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்…

Sakthi

இரண்டு ஏலக்காயை தட்டி பாலில் போட்டு குடித்து பாருங்கள்… இதனால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்…

தினமும் நாம் குடிக்கும் பாலில் இரண்டு ஏலக்காயை தட்டி போட்டு குடிப்பதால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஏலக்காய் என்று எடுத்தாலே இதில் பல நன்மைகள் அடங்கியுள்ளது. உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் கிடைக்கின்றது. பாலை தினமும் குடிக்கும் பொழுது இதில் அடங்கியுள்ள விட்டமின்கள் உடலுக்கு நன்மை அளிக்கின்றது. ஏலக்காயையும் பாலையும் சேர்த்து குடிக்கும் பொழுது நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாம்.

பாலில் ஏலக்காய் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…

* பாலில் ஏலக்காயை தட்டிப் போட்டு குடிக்கும் பொழுது உடலில் கால்சியம் சத்து அதிகரிக்கின்றது.

* ஏலக்காய் கலந்த பாலை குடிப்பதால் செரிமானம் மேம்படும். இதில் அடங்கியுள்ள ஃபைபர் ஊட்டச்சத்துக்கள் நமது செரிமான மண்டலத்தை பலப்மடுத்தும். பல விதமான செரிமான நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

* தினமும் பாலில் ஏலக்காயை போட்டு குடிப்பதால் நமக்கு இருக்கும் வாய் புண்கள் அனைத்தும் குணமாகும்.

* வயிற்றுப் புண்களால் அவதிப்பட்டு வருபவர்கள் தினமும் பாலில் ஏலக்காயை தட்டி போட்டு குடிக்கலாம்.

* இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் பாலில் ஏலக்காயை தட்டி போட்டு குடித்து வரலாம். இதனால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

* இதய நோய் இருபவர்கள் தினமும் ஏலக்காயை இரண்டு எடுத்து தட்டி பாலில் போட்டு குடிப்பதால் இதய நோய்கள் குணமாகும். மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.