நரைத்த முடி மீண்டும் பழையபடி கருமையாக.. “மருதாணி + நெல்லி” போதும்!!

Photo of author

By Rupa

இன்றைய தலைமுறையினர் சந்தித்து வரும் முக்கிய பிரச்சனை இளநரை.இதை கருமையாக்க மருதாணி இலையை கீழ்கண்டவாறு பயன்படுத்த வேண்டும்.

1)மருதாணி – ஒரு கப்
2)பெரிய நெல்லிக்காய் – 10

முதலில் ஒரு கைப்பிடி மருதாணி இலையை பறித்து நிழலில் நன்கு காய வைத்து கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு ஜல்லடையில் மருதாணி பொடியை கொட்டி சலித்து டப்பாவில் கொட்டி சேகரித்துக் கொள்ளுங்கள்.இதேபோல் 10 பெரிய நெல்லிக்காயை நன்கு காய வைத்து அரைத்து பவுடராக்கி கொள்ளுங்கள்.இதை மருதாணி பொடியில் கலந்து வைக்கவும்.

பிறகு கிண்ணம் ஒன்றில் அரைத்த மருதாணி நெல்லிப்பொடி இரண்டு தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.அதற்கு அடுத்து இரண்டு தேக்கரண்டி அளவு டீ தூளில் தண்ணீர் ஊற்றி பேஸ்ட்டாகவும்.

இதை தலையில் உள்ள முடிகளின் வேர் பகுதியில் படும்படியாக தடவி ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள்.பிறகு குளிர்ந்த நீரில் தலையை அலசுங்கள்.இவ்வாறு செய்தால் தலையில் உள்ள வெள்ளை முடிகள் கருமையாக மாறும்.

1)மருதாணி பொடி – மூன்று தேக்கரண்டி
2)கடுகு எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
3)தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி

மருதாணி இலைகளை காயவைத்து அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.இதில் மூன்று தேக்கரண்டி அளவு மருதாணி பொடியை கிண்ணத்தில் கொட்டி கொள்ளவும்.

பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி கடுகு எண்ணெய்,இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.இதை தலை முழுவதும் அப்ளை செய்து இரண்டு நாட்களுக்கு ஊறவிடவும்.

பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலசவும்.இப்படி செய்தால் தலையில் உள்ள வெள்ளை முடி அனைத்தும் கருமையாகும்.