பெரும் ஆபத்து.. இவர்களெல்லாம் கட்டாயம் கூழ் குடிக்கவே கூடாது!! மக்களே அலார்ட்!!
கோடை வெயிலை சமாளிப்பதற்காக ஏராளமானோர் இளநீர்,நுங்கு, கூழ் போன்றவற்றை தினந்தோறும் குடித்து வருகின்றனர். ஆனால் உடல் உபாதை உள்ளவர்களுக்கு இதனை சாப்பிட்டால் சேராமல் போகும். அந்த வகையில் யாரெல்லாம் கூழ் குடிக்கலாம் யாரெல்லாம் குடிக்க கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே மற்ற தானியங்களை காட்டிலும் கம்பில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. கம்பு சாப்பிடுவதால் அதில் உள்ள முழு சத்துக்களும் நமது உடலுக்கு கிடைக்கும். அதேபோல கம்பில் தான் அதிகளவிலான இரும்பு சத்து அதிகம் உள்ளது.ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களுக்கு கம்பை எடுத்துக்கொள்ளலாம். இந்த கம்பானது உடல் கொழுப்பை கரைக்க உதவும்.
கம்புடன் சிறிதளவு மோர் சேர்த்து குடிப்பதால் நமது குடலுக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகள் கம்பு சோறு, கூழ் போன்றவற்றை தினந்தோறும் சாப்பிடலாம். சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் கேப்பங்கூழ் குடிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் தைராய்டு மற்றும் செரிமான பிரச்சனை உள்ளவர்களும் இதனை அறவே குடிக்கக் கூடாது. சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்களும் இதனை குடிக்க கூடாது. மேற்கொண்டு வயிறு மற்றும் இவ்வாறன பிரச்சனை உள்ளவர்கள் வாரத்தில் ஒரு முறை குடிக்கலாம்.மேற்கொண்டு குடிக்க உங்களது மருத்துவரிடம் கலந்தாலோசிக்கலாம்.