அரசு ஊழியர்களுக்கு பெரிய ஜாக்பாட்! போனஸாக ரூ.311 கோடி ஒதுக்கல்!
இரண்டு ஆண்டுகளாக மக்கள் கொரோனா தொற்றினால் பெருமளவு பாதித்து வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகிறது.அந்தவகையில் அரசு ஊழியர்கள் கொரோனா காலக்கட்டத்திலும் மக்களுக்கு பெருமளவு உறுதியாக இருந்தனர்.விடுமுறை எடுத்து கொள்ளாமல் கூட அரசு ஊழியர்கள் அவர்களது பணியை பார்த்து வந்தனர்.
அந்தவகையில் அவர்களுக்கு அரசாங்கம் பல நலத்திட்டங்களை செய்து வருகிறது.தற்போது கேரளா அரசு அங்கு பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு போனஸ் தரப்போவதாக கூறியுள்ளனர்.நான்கு மாதங்களுக்கு முன்பு 5.2 லட்சம் ஊழியர்களுக்கு ஊதிய திருத்தத்தை செயல்படுத்த கேரளா அரசாங்கம் ரூ.450 கோடியை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.அதனையடுத்து தற்போது கொரோனா தொற்றில் அதிகளவு இழப்புகளை சந்தித்தது.மக்களுக்கு பல மருத்துவ உதவிகளை செய்ததாலும் நிதி பிரச்சனை ஏற்பட்டது.அந்தவகையில் தற்போது கேரளாவில் ஓணம் பண்டிகை வர உள்ளது.
நமது தமிழ்நாட்டில் தீபாவளி,பொங்கல் போன்று கேரளாவில் ஓணம் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடுவர்.நமக்கு தீபாவளி பண்டிகையின் போது போனஸ் என்று ஊக்கத்தொகை வழங்கப்படும்.அதுபோல ஓணம் பண்டிகையின் போது அவர்களுக்கு வழங்கப்படும்.அதனால் அங்கு இப்பொழுது ஊனம் பண்டிகை வர உள்ளது.அதன் காரணமாக கேரளா அரசு ரூ.311 கோடியை அரசு ஊழியர்களுக்கு போனஸாக தருவதற்கு ஒதுக்கியுள்ளது.
தற்பொழுது நிதி தட்டுபாடு காணப்பட்டாலும் அரசு ஊழியர்கள் அயராது உழைத்த காரணமாக போன்ஸ் தருவதாக கூறியுள்ளனர்.நிதி தட்டுப்பாடுகள் இருந்தும் அரசு ஊழியர்களுக்கு போன்ஸ் தரப்படும் என கேரளா அரசு கூறியதால்,அரசு ஊழியர்கள் மற்றற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அதுமட்டுமின்றி நாங்கள் அயராது வேலை செய்ததற்கு நல்ல பலன் கிடைத்ததாகவும் கூறுகின்றனர்.