நூலக நாளை முன்னிட்டு முதல்வரின் வாழ்த்து.!

0
92
Chief minister wishes on library day
Chief minister wishes on library day

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12ம் நாள் தேசிய நூலக நாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.டாக்டர் எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் பிறந்த நாளையே தேசிய நூலக நாளாக நாம் கொண்டாடுகிறோம்.ரங்கநாதன் அவர்கள் இந்தியாவில் நூலகத்தின் வளர்ச்சிக்காக பெரிதும் உழைத்தவர்.இவர் பிரிட்டிஷ் இந்தியாவின் சீர்காழியை சேர்ந்தவர்.

புத்தகம் வாசிக்கும் பழக்கம் இந்தியா முழுவதும் பரவலாக காணப்படுகிறது.நாட்டின் கல்வி முன்னேற்றத்தில் நூலகத்தின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.மேலும் நம் நாட்டில் பல அறிஞர்கள்,கல்வியாளர்கள்,கவிஞர்கள்,எழுத்தாளர்கள் உருவாக முதன்மை காரணம் புத்தகங்களே.

தமிழகத்திலும் புத்தக வாசிப்பாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.நூலகங்களும் பெருமளவில் உள்ளன.இந்தியாவிலேயே மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னையில்தான் அமைந்துள்ளது.இந்த நூலகம் 2010ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.இந்த நூலகம் 120 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னை சந்திக்க வருபவர்கள் தனக்கு பொன்னாடைகள்,பூங்கொத்துக்கள் வழங்குவதைவிட புத்தகங்களை வழங்குங்கள் என்று முதல்வரான பொழுதே கூறியிருந்தார்.தமிழகத்தை பொறுத்த வரை நூலகங்களால் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பெரிதும் பயனடைகின்றனர்.அதனாலேயே கல்வியில் தமிழகம் மேலோங்கி இருக்கிறது.

தமிழகத்தில் 19 மாவட்ட தலைமை நூலகங்களும்,1545 கிளை நூலகங்களும்,1069 பகுதி நேர நூலகங்களும்,9 நடமாடும் நூலகங்களும் உள்ளன.இன்று தேசிய நூலக நாளை ஒட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K