ரத்தக் கட்டுக்கு அருமையான மருந்து! இதை மட்டும் செய்து பற்று போட்டால் போதும்!
நாம் சில நேரங்களில் கவனக்குறைவாக இருக்கும் பொழுது நமக்கு அடி பட்டு விடும். அடிபட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தால் கூட அந்த வலி சில மணி நேரம் தான் இருக்கும். ஆனால் அடி பட்டு ரத்த கட்டு ஏற்பட்டு விட்டால் அது சில நாட்கள் வரை தீராத வலியை தந்துவிடும். அந்த வகையில் இந்த பதிவில் எளியையாக கிடைக்கக் கூடிய இரண்டு பொருட்களை மட்டும் பயன்படுத்தி நமக்கு காயங்களால் ஏற்படும் ரத்த கட்டை எவ்வாறு குணப்படுத்துவது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்…
* மஞ்சள்
* நெல்
நாம் அனைவருக்கும் மஞ்சள் இயற்கையான ஒரு கிருமி நாசினி என்று தெரியும். மஞ்சள் பல வகையான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இ
நமக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்தால் மஞ்சள் பொடியை வைத்தால் ரத்தம் நின்று விடும். அதே போல ரத்தக் கட்டை குணப்படுத்த மஞ்சளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
செய்முறை…
முதலில் மிக்சி ஜார் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் மஞ்சளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் நெல் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இதை அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் வாணலி ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதை அந்த வாணலியில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாக கொதித்த பின்னர் இதை ஆற வைக்க வேண்டும். ஆறிய பின்னர் இந்த விழுதை எடுத்து ரத்தக் கட்டு உள்ள இடத்தில் பற்று போட வேண்டும். இவ்வாறு. செய்தால் ரத்த கட்டு கரைந்து விடும். வலியும் இருக்காது.