நெதர்லாந்து அணியின் சிறப்பான ஆட்டம்!!! எதிர்பாராத தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா!!!

0
98
#image_title

நெதர்லாந்து அணியின் சிறப்பான ஆட்டம்!!! எதிர்பாராத தோல்வியை சந்தித்த தென்னாப்பிரிக்கா!!!

நெதர்லாந்து அணியின் சிறப்பான ஆட்டத்தால் எதிர்பாராத தோல்வியை தென்னாப்பிரிக்கா அணி சந்தித்துள்ளது. இதையடுத்து நெதர்லாந்து அணி உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

நேற்று(அக்டோபர்17) தர்மசாலாவில் நடைபெற்ற பெட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. போட்டியின் பொழுது சிறிது நேரம் மழை பெய்தது. இதையடுத்து 50 ஓவர்கள் கொண்ட போட்டி 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணி 43 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் சேர்த்தது. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்து 78 ரன்கள் சேர்த்தார். வன் டெர் மெர்வெ 29 ரன்களும், ஆர்யன் டட் 23 ரன்களும், தேஜா நிடமனுரு 20 ரன்களும் சேர்த்தனர். தென்னாப்பிரிக்கா அணியில் பந்துவீச்சில் மார்கோ ஜென்சன், ரபாடா, இங்கிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மஹராஜ், கோட்சே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

246 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி நெதர்லாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சினால் 44 ரன்கள் எடுப்பதற்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து ரன் எடுக்க முடியாமல் திணறியது. அதன் பிறகு களமிறங்கிய கிளாசன் மற்றும் மில்லர் இருவரும் பொறுமையாக விளையாடத் தொடங்கினர். இருப்பினும் 28 ரன்களை சேர்த்த கிளாசன் ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய மில்லர் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு களமிறங்கிய வீரர்கள் சிற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதி வரை வெற்றிக்காக போராடிய மஹராஜ் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 42.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்ய தென்னாப்பிரிக்கா அணி எதிர்பாராத முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

நெதர்லாந்து அணி இதுவரை நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களில் தன்னுடைய மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னர் 2007ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்திலும், 2003ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் நமீபியா அணியை 64 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅண்ணா பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை!! ஒரு மணி நேரத்திற்கு ரூ.300/- ஊதியம்!! வாங்க விண்ணப்பிக்கலாம்!
Next articleபொத்தி பொத்தி வச்ச உண்மையை உளரிய உதயநிதி!!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள் அதிர்ச்சியில் படக்குழு!!!