பெரும் அதிர்ச்சி துயரில் ரெய்னா! தொலைபேசியில் ஆறுதல் கூறிய தோனி!

0
149

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிழ்ச்சை பெற்று வந்தார் அவர் இன்று மரணமடைந்தார் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், உத்தரப்பிரதேச மாநில காசியாபாத் பகுதியில் இருக்கின்ற அவர்களது வீட்டில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது புற்றுநோயால் நீண்ட வருடங்களாக அவதிப்பட்டு வந்த அவர் காசியாபாத்திலிருக்கின்ற தன்னுடைய சொந்த வீட்டில் இன்று மரணமடைந்திருக்கிறார்.

சுரேஷ் ரெய்னாவின் தந்தை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி என்று சொல்லப்படுகிறது, அவருடைய பூர்வீக ஊர் ஜம்மு-காஷ்மீரில் இருக்கின்ற ரெய்னாவாரி என்ற கிராமமாகும். அவர் ராணுவ தொழிற்சாலையில் குண்டுகள் தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர் என்று சொல்லப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து ரெய்னாவுக்கு கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைதளங்களின் மூலமாக ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். அவரது மறைவுக்கு ஹர்பஜன்சிங் தன்னுடைய இரங்கலை தெரிவித்திருக்கிறார். மகேந்திர சிங் தோனி தொலைபேசியின் மூலமாக ரெய்னாவுடன் பேசி ஆறுதல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த சுரேஷ் ரெய்னா எதிர்வரும் ஐபிஎல் ஏலத்திற்கு தன்னுடைய பெயரைக்கொடுத்திருக்கிறார் அவரை சென்னை அணி தக்க வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது அடிப்படையாக 2 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

Previous articleசுனாமியில் மீட்கப்பட்ட பெண் குழந்தைக்கு சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் திருமணம்! நெகிழ்ந்த நாகை மக்கள்!
Next articleபிரபல பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கர் மரணம் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு! பிரதமர் நரேந்திர மோடி நேரில் மரியாதை!