நம் உடலில் உள்ள இரத்தத்தில் காணப்படும் ஒருவகை கழிவுகளை யூரிக் அமிலம் என்கிறோம்.இது அனைவரது இரத்தத்திலும் காணப்படும் ஒரு பொதுவான கழிவுப்பொருளாகும்.இருப்பினும் இதன் அளவு அதிகரித்தால் மூட்டு வலி,கால் வலி,கீல்வாத வலி போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
நமது உடலில் படியும் யூரிக் அமிலம் சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.ஆனால் அளவிற்கு அதிகமான யூரிக் அமிலம் படிந்தால் அவை கடுமையான கீல்வாத பாதிப்புக்கு வாழ்வகுத்துவிடும்.தொடர்ந்து யூரிக் அமிலம் படிவதால் எலும்புகள்,மூட்டுகள் மற்றும் திசுக்கள் சேதமடைந்து இறுதியாக இதய நோயை உண்டாக்கிவிடும்.
யூரிக் அமில அளவு அதிகரிப்பால் டைப் 2 நீரிழிவு,உயர் இரத்த அழுத்தம்,கல்லீரல் நோய்,முழங்கால் வலி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
யூரிக் அமிலம் சிறுநீரகத்தில் அதிகளவு படிந்தால் அவை கற்களை உருவாக்கிவிடும்.அதேபோல் எலும்புகளில் யூரிக் அமிலம் படிவதால் உடல் வலி உண்டாகிறது.பெருவிரல் யூரிக் அமிலம் படிந்தால் அவ்விடத்தில் வீங்கி அதிக வலியை ஏற்படுத்தும்.இந்த யூரிக் ஆசிட் அளவை குறைக்க வேண்டியது மிக முக்கியம்.
நாம் உண்ணும் உணவின் மூலம் யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.குறிப்பாக பச்சை பட்டாணியை உணவாக எடுத்துக் கொள்வதால் யூரிக் அமிலம் கட்டுப்படும்.பட்டாணியில் வைட்டமின்கள்,பீட்டா குலுக்கன் போன்றவை அதிகமாக காணப்படுகிறது.
பச்சை பட்டாணியை வேகவைத்து சாலட் போன்று சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் அதிகளவு யூரிக் அமிலம் படிவது கட்டுப்படும்.அதேபோல் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பச்சை பட்டாணி பெரிதும் உதவுகிறது.பச்சை பட்டாணியில் உள்ள வைட்டமின் கே மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.