உடலை காக்கும் பச்சை பேரிச்சை!! இத்தனை நோய்களை குணப்படுத்தும் அதிசய காய் இது!!

Photo of author

By Divya

உடலை காக்கும் பச்சை பேரிச்சை!! இத்தனை நோய்களை குணப்படுத்தும் அதிசய காய் இது!!

Divya

நமது கிராம புறங்களில் ஈச்ச மரம் பரவலாக காணப்படுகிறது.இந்த ஈச்ச மரத்தின் காய் சுவை மிகுந்ததாக இருப்பதோடு உடல் நோய்களை குணப்படுத்தும் மருந்தாக திகழ்கிறது.

பேரிச்சை காய் ஊட்டச்சத்துக்கள்:-

1)நார்ச்சத்துக்கள்
2)வைட்டமின்கள்
3)தாதுக்கள்
4)பாஸ்பரஸ்
5)துத்தநாகம்
6)மாங்கனீசு
7)இரும்பு
8)புரதம்

தினமும் பேரிச்சை காய் சாப்பிடுவதால் என்ன பலன்கள் கிடைக்கும்?

**பேரிச்சை காயில் ஏகப்பட்ட நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பேரிச்சை காயை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே ஏற்படாது.

**பேரிச்சை காயை சாப்பிட்டு வந்தால் உடலில் தசைப்பிடிப்புகள் ஏற்படாமல் இருக்கும்.உடல் வலி,உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் பச்சை பேரிச்சை சாப்பிடலாம்.

**தினமும் ஒரு பச்சை பேரிச்சை சாப்பிட்டு வந்தால் பசி உணர்வு கட்டுப்படும்.பச்சை பேரிச்சையில் குறைவான கலோரி இருப்பதால் டயட் இருப்பவர்கள் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

**கண் பார்வை குறைபாடு இருப்பவர்கள் பேரிச்சை காயை பொடித்து தேன் குழைத்து சாப்பிடலாம்.

**இரும்புச்சத்து குறைபாட்டை போக்க பேரிச்சை விதை பொடியை பாலில் கலந்து பருகலாம்.

**உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் பேரிச்சை காய் பொடியை சூடான பசும் பாலில் கலந்து பருகலாம்.

**போதை பழக்கத்தில் இருந்து மீள பேரிச்சை காயை பொடித்து தண்ணீரில் கலந்து பருகலாம்.

**நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள பேரிச்சை காய் பொடியை சாப்பிடலாம்.

**உடல் பலம் பெற பேரிச்சை காயை உட்கொள்ளலாம்.தொடர்ந்து பேரிச்சை காய் சாப்பிட்டு வந்தால் கண் புரை வராமல் தடுக்கலாம்.

**தொடர்ந்து பேரிச்சை காய் சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானமாவது கட்டுப்படும்.உடல் எலும்புகளின் வலிமை அதிகரிக்க பேரிச்சை காய் பொடி சாப்பிடலாம்.

**செரிமானப் பிரச்சனை கட்டுப்பட பேரிச்சை காயை சாப்பிட்டு வரலாம்.