குண்டு உடலை மெலிய வைக்கும் பச்சை வண்ண பழங்கள்!! டயட்டை தள்ளி வச்சிட்டு இனி இதை பாலோ பண்ணுங்க!!

Photo of author

By Divya

குண்டு உடலை மெலிய வைக்கும் பச்சை வண்ண பழங்கள்!! டயட்டை தள்ளி வச்சிட்டு இனி இதை பாலோ பண்ணுங்க!!

Divya

இந்த காலகட்டத்தில் உடல் பருமன் பிரச்சனையை வயது வித்தியாசமின்றி அனைவரும் எதிர்கொண்டு வருகின்றனர்.ஜங்க் புட்,எண்ணெய் உணவுகள்,பதப்படுத்தப்பட்ட உணவுகள்,சீஸ் உணவுகள்,கொழுப்பு நிறைந்த இறைச்சியை உண்பதால் தான் உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது.

தற்போதைய உணவுமுறை பழக்கத்தால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது.தொடர்ந்து ஆரோக்கியம் இல்லாத உணவுகளை உட்கொண்டால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்து இரத்த அழுத்தம்,இதய தமனி அடைப்பு,இரத்த குழாய் அடைப்பு போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

கடுமையான உடற்பயிற்சி செய்தாலும் ஆரோக்கிய டயட்டை பின்பற்றவில்லை என்றால் உடலில் எடை குறைப்பில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.சிலர் ஆபத்தான டயட்டை பின்பற்றுகின்றனர்.இது உடல் எடை குறைப்பிற்கு உதவும் என்றாலும் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும்.

உடல் எடை அதிகரித்தலால் மாரடைப்பு,பக்கவாதம்,கொலஸ்ட்ரால் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.உடலில் படியும் அதிகப்படியான கொழுப்பு கரைய பழங்களை உட்கொள்ளலாம்.பழத்தில் வைட்டமின்கள்,மினரல்கள்,ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகிறது.நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொண்டு வந்தால் உடல் எடை வேகமாக குறையும்.

அதிலும் பச்சை நிறப் பழங்கள் உடல் எடை குறைப்பில் பெரும் பங்கு வகிக்கிறது.கொய்யா,ஆப்பிள் போன்ற பச்சை நிற பழங்களை தினசரி உட்கொண்டால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

உடல் எடையை குறைக்கும் பச்சை நிற பழங்கள்:

1)கொய்யா பழம்

இந்த பழத்தில் பொட்டாசியம்,புரதம்,மெக்னீசியம்,கால்சியம்,இரும்பு,வைட்டமின் சி,பி6 உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.அதேபோல் கொய்யா பழத்தில் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொய்யா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.

டயட் இருப்பவர்கள் தங்கள் பட்டியலில் கொய்யா பழத்தை சேர்த்துக் கொள்வது நல்லது.கொய்யா பழம் சாப்பிடுவதால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளில் இருந்து மீள கொய்யா பழம் சாப்பிடலாம்.வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளுக்கு கொய்யா பழம் தீர்வாக இருக்கிறது.

2)பச்சை ஆப்பிள்

இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த இந்த பச்சை நிற ஆப்பிள் பழத்தை உட்கொள்ளலாம்.இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ஆப்பிள் பழத்தை உட்கொள்ளலாம்.

3)பேரிக்காய்

செரிமானப் பிரச்சனையை சரி செய்யும் பேரிக்காயில் உயர் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.பேரிக்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது.

4)கிவி

இப்பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.கிவி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.கிவி பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

5)அவகேடோ

இந்த பழத்தில் நார்ச்சத்து,ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.அவகேடோ பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.