இந்த கோடை காலத்தில் உடல் சூடு அதிகரித்து பல பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த உடல் சூட்டை தணிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பச்சை பயறு பால் செய்து சாப்பிடுங்கள்.பச்சை பயறு,தேங்காய் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சுவையான பால் செய்வது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)பச்சை பயறு – ஒரு கப்
2)ஏலக்காய் – மூன்று
3)தேங்காய் துருவல் – ஒரு கப்
4)ஊறவைத்த பாதாம் பருப்பு – 10
5)ஊறவைத்த முந்திரி பருப்பு – 10
6)ஊறவைத்த வால்நட் – 10
7)நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:-
**முதலில் ஒரு கப் பச்சை பயறு எடுத்து வாணலி ஒன்றில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பச்சை பயறு வாசனை வரும் வரை வறுத்தால் போதுமானது.பயறு கருகிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
**அடுத்து பச்சை பயறை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு மூடி தேங்காய் துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
**அதன் பின்னர் மிக்சர் ஜாரில் பச்சை பயறை போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து துருவி வைத்துள்ள தேங்காயை அதில் கொட்டி கொள்ள வேண்டும்.
**அதன் பிறகு மூன்று ஏலக்காய்,ஊறவைத்த வால்நட்,ஊறவைத்த முந்திரி மற்றும் ஊறவைத்த பாதாம் பருப்பை அதில் போட்டுக் கொள்ள வேண்டும்.
**பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.
**அடுத்து இனிப்பு சுவைக்காக தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.பின்னர் அடுப்பில் இந்த பாத்திரத்தை வைத்து மிதமான தீயில் பச்சை பயறு பாலை கொதிக்க வைக்க வேண்டும்.
**பிறகு அடுப்பை அணைத்துவிட்டு பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றி பருக வேண்டும்.டீ,காபி போன்ற பானங்களுக்கு பதில் இந்த பச்சை பயறு பால் குடித்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.