நம் பாரம்பரிய உணவுப் பொருளான பச்சை பயறு உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.பச்சை பயிறை வேக வைத்தோ அல்லது முளைக்கட்டியோ சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்கும்.
பச்சை பயிறில் நார்ச்சத்து,போலேட்,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.தினமும் ஒரு கைப்பிடி பச்சை பயறு சாப்பிட்டு வந்தால் உடல் எலும்புகள் இரும்பு போல் வலிமையாக இருக்கும்.முளைக்கட்டிய பச்சை பயறில் வைட்டமின் கே சத்து அதிகம் உள்ளது.தினமும் முளைக்கட்டிய பச்சை பயறு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கும்.
பச்சை பயறில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.பச்சை பயறை உணவாக எடுத்துக் கொண்டால் அது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை போன்றவை ஏற்படாமல் இருக்க பச்சை பயிறை உணவுக்காக எடுத்துக் கொள்ளலாம்.பச்சை பயறில் உள்ள இரும்பு மற்றும் காப்பர் இரத்த ஓட்டத்தை அதிகாரிக்கச் செய்கிறது.இதில் கலோரி குறைவு என்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும் சிலர் பச்சை பயறை சாப்பிடக் கூடாது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.வாயுப் பிரச்சனை இருப்பவர்கள் பச்சை பயறு சாப்பிடக் கூடாது,இதில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்திருப்பதால் வாயு பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
குறைவான இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் பச்சை பயறு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் பச்சை பயறை தவிர்க்க வேண்டும்.குறைந்த இரத்த சர்க்கரை கொண்டிருப்பவர்கள் பச்சை பயறு சாப்பிடக் கூடாது.