தமிழக அரசு மாணவர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களையும் கல்வி சார்ந்த திட்டங்களையும் உருவாக்கியவர் நிலையில் தற்போது 100 அரசு பள்ளிகளை தேர்ந்தெடுத்து அந்த அரசு பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டமானது நடைமுறைப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரால் இந்த பசுமை பள்ளி திட்டமானது சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டமாக துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, தற்பொழுது 100 அரசு பள்ளிகளை தேர்ந்தெடுத்து அந்த பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு காய்கறி தோட்டம் உருவாக்குவது, நீர் பயன்பாட்டை குறைப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல், மழைநீர் சேகரிப்பு, மக்கும் உரம் தயாரிப்பு, கழிவுநீரை மறுசுழற்சி செய்தல் போன்ற செயல்பாடுகளை கற்றுக் கொடுப்பதை மையமாகக் கொண்டு திட்டமானது உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் மாணவர்கள் தங்களுடைய பள்ளிப் பருவத்திலேயே சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை பெறுவதோடு நடைமுறை வாழ்க்கையில் செயல்முறை படுத்துவதை உறுதிப்படுத்த உதவும் என்றும் தெரிவித்துள்ளனர்.
2023 வரை சில பள்ளிகளில் இந்த பசுமை பள்ளி திட்டமானது நிதி ஒதுக்கீட்டின் பேரில் செயல்முறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான திட்டத்தில் 100 பள்ளிகளை தேர்ந்தெடுத்து 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தத் திட்டத்திற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிதியில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.