உடலுக்கு பல நன்மைகள் தரும் கிரீன் டீ!!! இதில் ஐஸ்கிரீம் எவ்வாறு செய்வது!!?

Photo of author

By Sakthi

உடலுக்கு பல நன்மைகள் தரும் கிரீன் டீ!!! இதில் ஐஸ்கிரீம் எவ்வாறு செய்வது!!?

உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய கிரீன் டீயில் ஐஸ்கிரீம் எவ்வாறு செய்து சாப்பிடுவது என்பது பற்றியும் இந்த கிரீன் டீயின் நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் கிரீன் டீயை அதிமாக எடுத்துக் கொள்வார்கள். இந்த கிரீன் டீயை குடிப்பதால் நம் உடலில் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து வெளியேறுகின்றது. இந்த கிரீன் டீ மேலும் பல நன்மைகளை நம் உடலுக்கு தருகின்றது. அதை பற்றியும் இதில் ஐஸ்கிரீம் எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

அதிக சூடாக இருக்கும் வெயில் காலங்களில் இந்த கிரீன் டீ ஐஸ்கிரீம் நம் உடலுக்கு தேவையான ஒன்றாகும். இந்த கிரீன் டீ ஐஸ்கிரீம் என்பது வழக்கத்திற்கு மாறாக இருந்த போதிலும் இதன் சுவை தனித்துவமானதாக இருக்கும். வழக்கம் போல வெண்ணிலா, ஸ்ட்ராபெர்ரி, பட்டர் ஸ்காட்ச், சாக்லெட் போன்ற ஐஸ்கிரீம்களின் சுவை போல இல்லாமல் இது புதுவிதமான சுவையை தருகின்றது. இதை செய்ய தேவையான பொருட்கள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கிரீன் டீ ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள்…

* கொழுப்பு நீங்காத பால் – 400 மி.லி
* பிரஷ் கிரீம் – 300 மி.லி
* முட்டை – 6
* கஸ்டர்ட் சுகர் – 1/2 கப்
* கிரீன் டீ தூள் – 20 கிராம்

செய்முறை…

முதலில் அடுப்பை பற்ற வைத்து அடி கனமான பாத்திரத்தை அதில் வைத்து கொழுப்பு நீக்காத பால் மற்றும் பிரஷ் கிரீம் இரண்டையும் சேர்த்து சூடாக்க வேண்டும். பால் மற்றும் கிரீம் லேசாக சூடானதும் அதை இறக்கி வைத்துவிட வேண்டும்.

மற்றொரு பாத்திரம் எடுத்து அதில் கஸ்டர்ட் சுகர் மற்றும் முட்டைகளை உடைத்து அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். அதன் பின்னர் இதில் கிரீன் டீ தூளை இதில் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.

பின்னர் காய்ச்சி வைத்துள்ள பாலையும் இதில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை அடுப்பில் வைத்து லேசாக சூடாக்கி கலவை கெட்டியாக ஆரம்பித்ததும் இதை இறக்கி ஆற வைக்க வேண்டும்.

இந்த கலவை ஆறிய பின்னர் ஒரு பவுலிங் ஊற்றி குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்க வேண்டும். சிறிது நேரம் எடுத்து பார்த்தால் பாலாக வைத்த கிரீன் டீ ஐஸ்கிரீமாக மாறி இருக்கும்.

இந்த. கிரீன் டீயின் நன்மைகள்..

* கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடன்ட் சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.

* முன்னர் கூறியதை போலவே உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் கிரீன் டீயை குடிக்கலாம்.

* கிரீன் டீயை குடிப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம்.

* கிரீன் டியை குடிப்பதால் மனச்சோர்வை நீக்கலாம்.

* பெண்களின் ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதற்கு இந்த கிரீன் டீ பயன்படுகிறது.

* கிரீன் டீயை குடிப்பதால் உடலில் நீரோட்டத்தை தக்கவைக்கும். மேலும் நாள். முழுவதும் உற்சாகமாக இருக்க உதவி செய்கின்றது.