மோசமான உணவுகளால் குடலில் அதிகப்படியான கெட்ட வாயுக்கள் தேங்குகிறது.இதனால் ஆசனவாயில் துர்நாற்றத்துடன் கூடிய காற்று வெளியேறி தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது.குடலில் தேங்கியுள்ள கெட்ட வாயுக்களை வெளியேற்ற ஓமம்,பெருஞ்சீரகம்,சீரகம் உள்ளிட்ட பொருட்களை அரைத்து நீரில் கொதிக்க வைத்து பருக வேண்டும்.
தேவையான பொருட்கள்:-
1)பெருஞ்சீரகம் – 1/2 தேக்கரண்டி
2)ஏலக்காய் – ஒன்று
3)சீரகம் – 1/2 தேக்கரண்டி
4)ஓமம் – 1/2 தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:
*முதலில் அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் எடுத்துக் கொள்ளுங்கள்.அடுத்து அரை தேக்கரண்டி சீரகம்,அரை தேக்கரண்டி ஓமம் மற்றும் ஏலக்காய் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
*இந்த நான்கு பொருட்களையும் வாணலியில் போட்டு லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
*பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் ஊற்றி அரைத்த பவுடரை கொட்டி கலந்து பருகினால் குடலில் தேங்கி உள்ள கெட்ட காற்று வெளியேறிவிடும்.
தேவையான பொருட்கள்:
1)சீரகம் – ஒரு தேக்கரண்டி
2)பெருங்காயம் – அரை தேக்கரண்டி
3)மிளகு – ஐந்து
4)கறிவேப்பிலை – ஒரு கொத்து
5)ஓமம் – அரை தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:
*அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி சீரகம்,ஐந்து கருப்பு மிளகு,அரை தேக்கரண்டி ஓமம் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு மிதமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
*பிறகு ஒரு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.இதனுடன் அரை தேக்கரண்டி பெருங்காயத் தூள் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
*இந்த பவுடரை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகினால் குடலில் உள்ள கெட்ட வாயுக்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
*குடல் ஆரோக்கியத்திற்காக தினமும் இந்த பானத்தை பருகி வர வேண்டும்.அதேபோல் மோரில் பெருங்காயத் தூள் கலந்து பருகினால் வயிறு உப்பசம்,வாயுத் தொல்லைக்கு உரியத் தீர்வு கிடைக்கும்.