இந்த 2 பொருட்களை பசை போல் அரைத்து மூட்டு பகுதியில் பூசினால்.. வலி வீக்கம் நிமிடத்தில் குறையும்!!

Photo of author

By Divya

கடுமையான மூட்டு வலி தொந்தரவை அனுபவித்து வருபவர்கள் இங்கு சொல்லப்பட்டுள்ள கை மருந்து செய்முறையை பின்பற்றினால் உரிய பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)சின்ன வெங்காயம் – பத்து
2)முருங்கை கீரை – ஒரு கைப்பிடி
4)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:-

**ஒரு கைப்பிடி முருங்கை கீரையை பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

**அடுத்து பத்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.

**பிறகு ஒரு மிக்சர் ஜாரில் முருங்கை கீரை மற்றும் உரித்த சின்ன வெங்காயத்தை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

**பிறகு இந்த முருங்கை வெங்காய விழுதை ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து குழைத்துக் கொள்ளுங்கள்.

**பிறகு மூட்டு பகுதியில் வெந்நீர் ஒத்தடம் கொடுத்த பிறகு அரைத்து வைத்துள்ள முருங்கை விழுதை இரு மூட்டுகளின் மேலும் பற்றுப்போட வேண்டும்.இந்த விழுது நன்கு காய்ந்து வந்த பிறகு அதை அகற்றிவிட்டு மீண்டும் வெந்நீர் கொண்டு மூட்டுகளுக்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

இந்த செயல்முறையை தொடர்ந்து செய்து வந்தால் மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் உண்டாவது கட்டுப்படும்.

தேவையான பொருட்கள்:-

1)எப்சம் உப்பு – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கப்

பயன்படுத்தும் முறை:-

**முதலில் பாத்திரம் ஒன்றில் ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

**தண்ணீர் நன்கு சூடானதும் ஒரு தேக்கரண்டி எப்சம் உப்பு சேர்த்து கலந்துவிட வேண்டும்.

**பிறகு ஒரு காட்டன் துணியை அந்த எப்சம் உப்பு நீரில் போட்டு பிழிந்து மூட்டு பகுதியில் வைத்து அழுத்தம் கொடுத்தால் வலி,வீக்கம் குறையும்.

**அதேபோல் தினமும் இரவு நேரத்தில் சுடுநீர் கொண்டு மூட்டு பகுதியில் ஒத்தடம் கொடுத்தால் வலி,வீக்கம் குறையும்.

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு பற்கள் – 10
2)எருக்கன் இலை – இரண்டு
3)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:-

**முதலில் இரண்டு எருக்கன் இலையை உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் பத்து பல் பூண்டை தோல் நீக்கிவிட்டு சேர்த்து பசை பதத்திற்கு அரைக்க வேண்டும்.

**பிறகு இதில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து மூட்டு பகுதியில் பூச வேண்டும்.பிறகு ஒரு காட்டன் துணி கொண்டு அவ்விடத்தை கட்ட வேண்டும்.

**இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் மூட்டு வலி,மூட்டு வீக்க பாதிப்பு முழுமையாக குணமாகும்.