உங்களில் சிலருக்கு சரும பாதிப்புகளான தேமல்,சொறி,சிரங்கு,படர் தாமரை,வெண் புள்ளிகள் போன்ற பாதிப்புகள் இருக்கும்.இந்த பாதிப்புகள் எதனால் ஏற்படுகிறது என்ற காரணங்கள் பலருக்கும் தெரிவதில்லை.இதுபோன்ற சரும பாதிப்புகளை கண்டுகொள்ளாமல் அலட்சியப் படுத்தினால் அது அசௌகரியத்தை ஏற்படுத்திவிடும்.
அரிப்பு,எரிச்சல்,நமைச்சல்,போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இதுபோன்ற தோல் பாதிப்புகள் கண்ணுக்கு தெரியாத நுண்கிருமிகளால் ஏற்படுகிறது.சொரி சிரங்கு இருந்தால் இரவில் அதிக அரிப்பு,எரிச்சல் ஏற்படும்.இந்த தோல் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும்.
இந்த தோல் பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வதனால் பிறருக்கு இது எளிதில் பரவிவிடுகிறது.பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய டவல்,துணி,சோப் போன்றவற்றை பயன்படுத்தினால் எளிதில் தொற்றிவிடும்.
சொரி சிரங்கு தேமல் படை நீங்க இயற்கை வைத்தியம்
1)பூவரசு இலையை அரைத்து தோலில் பூசினால் சொரி சிரங்கு உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.
2)பூவரசு இலை மற்றும் அதன் காயை உலர்த்தி பொடியாக்கி தண்ணீரில் குழைத்து சருமத்தில் பூசினால் தேமல்,சொரி,சிரங்கு போன்றவை குணமாகும்.
3)பூவரசு காயில் உள்ள பாலை சருமத்தில் பூசினால் சொரி,சிரங்கு நீங்கும்.
4)பூவரசு காயை அரைத்து நெற்றியில் பூசினால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.பூவரசு பட்டையை சுத்தமான தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவிட்டு தோலில் அப்ளை செய்தால் சொரி சிரங்கு தேமல் பிரச்சனை சரியாகும்.இதுபோன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி சொரி,சிரங்கு,தேமல் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்தால் நல்ல பலன் கிடைக்கும்.