Groundnut Oil Benefits: கடலை எண்ணெய்யில் இவ்வளவு பயன்களா?

0
271
Groundnut Oil Benefits in Tamil-News4 Tamil Latest Health Tips in Tamil
Groundnut Oil Benefits in Tamil-News4 Tamil Latest Health Tips in Tamil

Groundnut Oil Benefits: கடலை எண்ணெய்யில் இவ்வளவு பயன்களா?

நாம் உணவு சமைக்க பயன்படுத்தும் கடலை எண்ணெய் என்பது வேர்கடலையை நசுக்கி வடிகட்டி அதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். இவ்வாறு எடுக்கப்படும் இந்த கடலை எண்ணெய் தான் நாம் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆகும்.

கடலை எண்ணெய் மஞ்சள் நிறத்தில் இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட பிறகு கடலை எண்ணெய் இளம் மஞ்சள் நிறமாக இருக்கும். பெரும்பாலும் கடலை எண்ணெய் தான் பொறித்து எடுக்க சிறந்த எண்ணெய் ஆகும். கடலை எண்ணெய் கொதிநிலையானது 230 டிகிரியாகும். எனவே இது தான் பாதுகாப்பான சிறந்த எண்ணெய் என்று பெரும்பபாலும் பயன்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் கடலை எண்ணையின் பயன்கள் (benefits of peanut oil) பற்றி இங்கு பார்ப்போம் 

கடலை எண்ணெய் சத்துக்கள்: Benefits of Groundnut in Tamil

நம் சமையலில் பயன்படுத்தும் கடலை எண்ணெய் உடலுக்கு அதிக ஆற்றல் தரக் கூடியது. 100 கிராம் கடலை எண்ணெயில் நமது உடலுக்கு தேவையான 884 கலோரி சக்தி கிடைக்கிறது.

கடலை எண்ணெயில் அதிக அளவில் லிப்பிடுகள் உள்ளது. இது பூரிதமான கொழுப்புகள் நமது உடலில் சேரவும், கெட்ட கொழுப்பான கொலஸ்டிரால் நம்ம உடலில் சேராமல் உடலை பாதுகாக்கவும் உதவுகிறது.

கடலை எண்ணெய் ஒமேகா 6 எனப்படும் கொழுப்பு அமிலத்தை அதிகமாக கொண்டுள்ளது. பீட்டா சிட்டோஸ்டிரால் என்ற துணை ரசாயன பொருளும் கடலை எண்ணெயில் உள்ளது. இது உடலில் இருக்கும் கொலஸ்டிராலை அகற்றும் தன்மையும் கொண்டது.மேலும் கடலை எண்ணெயில்’வைட்டமின்-இ‘ அதிகம் உள்ளது.

Groundnut Oil Benefits in Tamil-News4 Tamil Latest Health Tips in Tamil
Groundnut Oil Benefits in Tamil-News4 Tamil Latest Health Tips in Tamil

கடலை எண்ணெய் பயன்கள்: Benefits of Groundnut Oil in Tamil

இரத்தசோகை வராமல் தடுக்க:

கடலை எண்ணெயில் போலிக் அமிலம் அதிகமாக உள்ளது. போலிக் அமிலம் குறைவாக இருந்தால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்து விடும். இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் சிவப்பு இரத்த அணுக்களின் அளவு குறைந்து விடும். இரத்த சிவப்பணுக்களில் உள்ள இரும்புச் சத்துக் குறைவதால் இரத்த சோகை நோய் உண்டாகும்.

சுகப்பிரசவம் நடக்க:

மேலும், கடலை எண்ணெயில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பம் தரித்த பெண்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். கருத்தரித்த கர்ப்பிணி பெண்கள் தினமும் தவறாது கடலை எண்ணெய் பயன்படுத்தி வந்தால், மகப்பேறு எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

நீரிழிவு நோய் வருவதை தடுக்க:

மேலும் கடலை எண்ணெயில் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படுவதை தவிர்க்கலாம். கடலை எண்ணெயில் மாங்கனீசு சத்து அதிகம் உள்ளது. மாவுச் சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் கடலை எண்ணெயில் உள்ள மாங்கனீசு பெரும் பங்காற்றுகிறது.

இதயநோய் வராமல் தடுக்க:

நிலக்கடலையில் உள்ள ரெஸ்வாரட்ரால் என்ற சத்துப் பொருள் இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. இதனால் இதய நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:

கடலை எண்ணெயில் உள்ள பாலிபீனால் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.கடலை எண்ணெயில் உள்ள ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக தருகிறது.

இளமையான தோற்றத்தை பெற:

கடலை எண்ணெய் இளமைத் தோற்றத்தை நீண்ட நாட்கள் பராமரிக்கிறது. கடலை எண்ணெய் சரியான அளவில் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை அடிக்கடி சாப்பிடும் நபர்களுக்கு அவர்களின் சருமத்தில் வயதாவதால் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி, இளமையான பொலிவான தோற்றம் ஏற்படும்.

ஞாபகச் சக்தியை அதிகரிக்க

கடலை எண்ணெயில் உள்ள நியாசின் சத்து மூளை வளர்ச்சி, ஞாபகச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. கடலை எண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை நாம் அதிகமாக சாப்பிட்டு வருவதால் மூளை செல்கள் புத்துணர்ச்சி பெரும்.நரம்புகள் பாதிப்பு, ஞாபக மறதி போன்ற குறைபாடுகளும் இதனால் நீங்கும். கடலை எண்ணையை பயன்படுத்துவதன் மூலமாக் முதியோர்களுக்கு ஏற்படும் மனசோர்வு பிரச்சனையையும் குறைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

Groundnut-Oil-Benefits-in-Tamil-News4-Tamil-Latest-Health-and-Beauty-Tips-in-Tamil
Groundnut-Oil-Benefits-in-Tamil-News4-Tamil-Latest-Health-and-Beauty-Tips-in-Tamil

புற்றுநோய் வராமல் தடுக்க:

கடலை எண்ணெயில் சாப்பிடுவதால் பெண்கள் மார்பகக் கட்டி, புற்று நோய் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பைக் கட்டி, நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் இதன் மூலமாக தடுக்கலாம். கடலை எண்ணெய்க்கு இயற்கையாகவே உடலில் கலக்கும் தீங்கு பொருட்களை எதிர்த்து செயலாற்றும் சக்தி அதிகமாக உள்ளது. எனவே உடலில் இருக்கும் திசுக்கள் மற்றும் செல்களில் வளரக்கூடிய புற்று நோயை எதிர்த்து கடலை எண்ணெய் சிறப்பாக செயல்புரிவதாக பல மருத்துவ ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூட்டு வலி ஏற்படுவதை தவிர்க்க:

முப்பது வயதை தாண்டிய ஒவ்வொருவருக்கும் கடின உடல் உழைப்பினாலும், உடலுக்கு தேவையான சத்துக்கள் இல்லாததனாலும் உடலிலுள்ள அனைத்து மூட்டு பகுதிகளிலும் வலி ஏற்படுகிறது. சிறிதளவு சமையலுக்கு பயன்படுத்தும் கடலை எண்ணையை எடுத்து வலி ஏற்படும் மூட்டு பகுதிகளில் நன்கு தடவி, சிறிது நேரம் மெதுவாக அந்த இடங்களை பிடித்து விட்டால் சிறிது நேரத்திலேயே அந்த மூட்டு வலி நீங்கும்.

தலைமுடி உதிர்வதை தடுக்க:

தலைமுடியின் சிறந்த ஆரோக்கியத்திற்கும், வலுவிற்கும் வைட்டமின் இ மிகவும் அவசியம். இந்த வைட்டமின் இ சத்து உடலில் குறைவதால் தலைமுடியானது வலுவிழந்து முடி கொட்டும் பிரச்சனை ஏற்படுகிறது.உணவில் கடலை எண்ணெய் அதிகம் உபயோகிப்பதால் அதில் இருக்கும் வைட்டமின் இ சத்து இந்த முடி உதிரும் பிரச்சனையை போக்குகிறது.மேலும் தலைமுடி ஆரோக்கியமாகவும், நல்ல வளர்ச்சியும் பெற இது உதவுகிறது.

சருமத்தில் ஏற்படும் வறட்சியை தடுக்க:

சிலருக்கு சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் வறட்சி ஏற்பட்டு தோல்வெடிப்பு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் சருமத்தில் ஏற்படுகின்றன. கடலை எண்ணெய் சிறிதளவு எடுத்து முகம் மற்றும் கை, கால்களில் வறட்சியான பகுதிகளில் நன்கு தேய்த்து கொண்டு, பின்னர் சிறிது நேரம் கழித்து குளித்தால் சருமத்தில் உள்ள வறட்சி நீங்கி சருமம் மிருதுவானதாக மாறும்.

மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த

கடலை எண்ணெய் பெரும்பாலும் அனைத்து வயதினராலும் சுலபத்தில் செரிமானம் செய்யக்கூடிய தன்மை கொண்டதாக இருக்கிறது. இதனால் செரிமான திறன் சரி வர இல்லாதவர்கள், வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீண்ட காலம் மலச்சிக்கல் பிரச்சனை கொண்டவர்கள் கடலை எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது நல்ல பலனளிக்கும்.

Previous articleசுய இன்பம் செய்வதால் வரும் நன்மைகளும் தீமைகளும்! யாருக்கும் தெரியாத ரகசிய தகவல்கள்!!
Next articleஅழகான சருமத்திற்கு அம்சமான ஐந்து வழிகள்..!!